அருட்தந்தை ஜான்சுரேஷ் படத்துக்கு பத்திரிகையாளர்கள் அஞ்சலி
பெரம்பூர் லூர்து அன்னை திருத்தலத்தின் அருட்தந்தையும் பகுஜன் குரல் மாத இதழின் கௌரவ ஆலோசகருமான ஜான்சுரேஷ் சமீபத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பெரம்பூரில் உள்ள தென்னிந்திய புத்த விஹாரில் ( புத்தர் கோவில் ) பகுஜன் குரல் பத்திரிகையின் ஆசிரியரும், இந்திய வெகுஜன பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் K.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பத்திரிகை சங்க நிர்வாகிகள், பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அருட்தந்தை ஜான்சுரேஷூக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பிறகு பகுஜன் குரல் ஆசிரியர் அருட்தந்தை ஜான்சுரேஷின் நினைவுகளை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
இரண்டாயிரமாவது ஆண்டில் பாதர் ஜான்சுரேஷ் இளைஞர்களை ஒன்றினைத்து பறை இசையை அறிமுகம் செய்து விளக்கம் அளித்தார். ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்களின் சந்தேகங்களை போக்கி அனைவரையும் அவரது அன்பிற்கு அடிமையாக்கினார்.அனைவரிடமும் அன்போடு நடந்து கொள்வார்.
அவர் வாழ்ந்த காலத்தில் அவரோடு வாழ்ந்ததில் நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்.சமூதாய அக்கறையோடு பல்வேறு அரசியல் தலைவர்களோடு இணைந்து, நட்புடன் பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார். அம்பேத்கர் மீது தீராத பற்று கொண்டு அறிவுக்கூர்மையிடன் திகழ்ந்தார் பாதர் ஜான்சுரேஷ். அனிதா ஐஏஎஸ் அகாடமியின் இயக்குனராக சிறப்பாக செயல்பட்டார் என்று அருட்தந்தை ஜான்சுரேஷ் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார் .
இந்நிகழ்ச்சியில் புரசை எக்ஸ்பிரஸ்,கடல் துளிகள் ஆசிரியர் பிரபா,பத்திரிகை ஆசிரியர் யுவராஜ் உள்ளிட்ட ஆசிரியர்களும், பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகளும், ஏராளமான பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.