பல்லடத்தில் காணாமல் போன பெண் கடத்தப்பட்டாரா ? வைரலாகும் வீடியோ…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த பிரவீணா என்பவரது வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவினா காணாமல் போனதாக பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரவினாவிற்கு திருமணமாகி கணவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். மேலும் காணாமல் போனதாக கூறப்படும் பிரவினாவிற்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்நிலையில் பிரவினாவை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில் பிரவினா கண்ணீருடன் பேசி வெளியிட்ட வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வீடியோவில் பேசும் பிரவினா பல்லடத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரிடம் இருந்து தன்னை காப்பாற்றுமாறு அழுதுகொண்டே பேசுகிறார். மேலும் கோடிக்கணக்கில் தன்னை பயன்படுத்தி கடன் பெற்றுள்ளதாகவும், எதற்காக கையெழுத்து பேட்டேன் என தனக்கே தெரியாது எனவும் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
மேலும் சமூக வளைதளங்களில் சிவக்குமாரும் பிரவினாவும் ஒன்றாக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது போலவும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவக்குமார் என்பவரது பெயரில் இது வரை எந்த ஒரு மோசடி வழக்கும் பதிவாகவில்லை என தெரிகிறது. மேலும் காணாமல் போனவர் திருச்சியில் தான் இருக்கிறாரா? அல்லது கடத்தப்பட்டாரா? அல்லது வங்கிகள் பெற்ற கடனை திரும்ப செலுத்தமுடியாமல் சிவக்குமாரே இது போன்று வீடியோக்களை சமூக வளைதளங்களில் வெளியிட்டுள்ளாரா? என்பன போன்ற கேள்விகள் எழுகிறது.
மேலும் சமூக வளைதளங்களில் வைரலாகிவரும் வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டதா? என்பதை போலீசார் தான் விசாரித்து முடிவு செய்யவேண்டும். சிவக்குமாரின் பிடியில் சிக்கியிருந்த பிரவினா ஏன் சென்னை ரெட் ஹில்ஸில் உள்ள தனக்கு தெரிந்தவர்கள் வீட்டில் தங்கி வீடியோ வெளியிடுவதற்கு பதிலாக ஏன் காவல்துறை உதவியை நாடவில்லை? பெண் ஒருவர் வீடியோவில் கண்ணீருடன் பேசி தன்னை காப்பாற்ற கோரி இத்தனை நாட்கள் ஆகியும் காவல்துறை மவுனம் காப்பதாக கருத நேரிடும். எனவே சம்பந்தப்பட்ட பிரவினாவை உடனடியாக கண்டுபிடித்து காணாமல் போனாரா? அல்லது கடத்தப்பட்டாரா? என்கிற உண்மையான காரணத்தை கண்டுபிடித்து உண்மையை வெளிக்கொணரவேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.