தமிழகம்
நாட்டிலேயே முதல் முறையாக கே.சி. வீரமணி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு !
அதிமுக முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்டச் செயலாளருமான கே.சி. வீரமணி கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பொய்யான பிரமான பத்திரம் தாக்கல் செய்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
விசாரணையில் கே.சி. வீரமணி பொய்யான பிரமான பத்திரம் தாக்கல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் அதிகாரியால் வழக்கு தொடரப்பட்டது. இதன் காரணமாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125-A பிரிவின் கீழ், நாட்டிலேயே முதல் முறையாக கே.சி. வீரமணி மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று காலை கே.சி. வீரமணி நேரில் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை ஜனவரி 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.