பத்திரிகையாளர்களுக்கு இருக்கை ஒதுக்காததால் சர்ச்சையில் சிக்கிய திருப்பூர் மேயர்
திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் மேயர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டரங்கில் பத்திரிகையாளர்களுக்கு போதிய இருக்கைகள் வழங்கவில்லை. ஏராளமான பத்திரிகையாளர்கள் நின்று கொண்டு செய்தி சேகரித்து வந்தனர்.
இந்நிலையில் பத்திரிகையாளர்கள் அமரும் இருக்கையில் ஒப்பந்ததாரர்கள், சுகாதார துறை அதிகாரிகள் அமர்ந்து கொண்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.
இது குறித்து கூட்டரங்கிற்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மக்கள் தொடர்பு அதிகாரியிடம் பத்திரிகையாளர்கள் அமரும் இடத்தில் திமுகவினர் மாநகராட்சி அதிகாரிகள் அமர்ந்துள்ளனர் அவர்களை வேறு இடத்திற்கு செல்ல கூறுங்கள் என தெரிவித்த போது பொறுப்பற்ற பதிலை கூறியதால் பத்திரிகையாளர்கள் வாக்குவாதம் செய்தனர்.
இதனை கவனித்த மாநகராட்சி மேயர் பத்திரிகையாளர்களுக்கு இருக்கை ஏற்பாடு செய்து கொடுங்கள் அல்லது பார்வையாளர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் இருக்கை ஒதுக்கி கொடுங்கள் என தெரிவித்தால்,
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகையாளர்கள் கூட்டத்தை வீடியோ புகைப்படம் எடுக்க வேண்டும் பார்வையாளர்கள் அறையில் இருந்தால் வீடியோ, புகைப்படங்கள் எடுக்க உடனடியாக வர இயலாது என கூறியதை அடுத்து கூட்டரங்கில் அவசர அவசரமாக இருக்கைகள் போடப்பட்டது , திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு இருக்கை வசதி கொடுக்காத சம்பவம்
கூட்டரங்கில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்படுத்தியது.