தமிழகம்

கண்ணகி கோட்டம் : அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா?

மங்கள தேவி கண்ணகி கோட்டம் சிலப்பதிகாரம் கூறும் வரலாறு உண்மை. தமிழகத்துக்கு உட்பட்ட மலைப்பகுதியில் அமைந்துள்ளது கண்ணகி மலைக்கோவில் பல முக்கியமான வரலாற்று உள்ளடக்கியது. நம்முடைய முன்னோர்கள் பார்த்து தெரிந்து அறிந்த உண்மைகள் வரலாற்றை இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள மற்றும் தெரிந்து கொள்ளாமல் விட்டால் நாம் நம் எல்லைகளையும் உண்மை வரலாற்றையும் பல உண்மைகளையும் இழக்க நேரிடும்.

கண்ணகி கோவில் இருக்கும் இடம் நம் தமிழ்நாட்டு எல்லைக்குள் உள்ளது என்பதை உணரவேண்டும் பல ஆய்வுகள் அறிஞர்கள் முன்னோர்கள் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து தமிழக எல்லையில் தான் உள்ளது என்பதை கண்டறிந்து நமக்கு தெரியப்படுத்தி உள்ளார்கள் மேலும் 1817&ல் கிழக்கிந்திய கம்பெனி ஆங்கில ஆட்சியில் நடத்திய சர்வே மிகவும் பழமையானது, கண்ணகி கோட்டம் தமிழக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. 1893&1896ல் நடத்திய சர்வே எண் 1913& 1915 ல் வெளியிடப்பட்ட எல்லை காட்டும் வரைபடங்களும் இதையே வலியுறுத்தியுள்ளது. மீண்டும் 1959ல் கேரளா அரசு கண்ணகி கோவில் எல்லையில் எந்தவித ஆட்சேபனையும் எழுப்பவில்லை மீண்டும் 1976 ல் தமிழ்நாடு கேரளா அரசு அதிகாரிகள் கூட்டாக சர்வே செய்ததில் கண்ணகி கோவில் கேரளா எல்லையில் இருந்து 40 அடி தூரம் தள்ளி தமிழக எல்லை பகுதியில் இருப்பது ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதன் முடிவில் 1976ல் மங்கலதேவி கண்ணகி கோவில் கோட்டை சீரமைப்பு குழு ஒன்று சேர்ந்து தமிழக முதல்வர் கலைஞரை சந்தித்து மலைக்கோவிலுக்கு உதவி கேட்கப்பட்டது. அப்போது கூடலூர் கே.பி கோபால் எம்எல்ஏவாக இருந்த போதுதான் மங்கலதேவி கண்ணகி மலைக்கோவிலுக்கு செல்ல பாதை அமைக்க வேண்டும் என்று சட்டசபையில் பேசி இதனைத் தொடர்ந்து தமிழக கம்பம் பகுதி வழியாக மலைக்கோவிலுக்கு ரோடு போட ரூபாய் 20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. வேலையும் தொடங்கப்பட்டு வேலை நடந்து வந்தது. திடீரென அவசர நிலை காலத்தில் கலைஞர் அரசு பதவி நீக்கம் செய்யப்பட்டது. இதனால் இந்த திட்டம் தாமதப்படுத்த பட்டு பல ஆண்டுகளுக்கு நிலுவையில் இருந்து வந்தது.

இதை அறிந்து கொண்ட கேரளா அரசு கேரளா வனப்பகுதி எல்லைக்குள் அவர்கள் மலைக்குச் செல்ல வாகனங்கள் செல்ல பாதை அமைத்தனர். இதன் பின் கேரளாவின்ஆக்கிரமிப்பு, தமிழர்கள் மீது அத்துமீறி நடந்து கொண்டது குறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு நான் தொடர்ந்தேன்.

கண்ணகி கோவிலுக்கு சென்று தமிழர்கள் வாழ்ந்து உள்ளார்கள். ஆனால் இதன் உரிமை தமிழகம் இழந்து வருகிறது. கடந்த மாதம் வருவாய் கோட்ட ஆட்சியர் கொசல்யா உத்தமபாளையம் அலுவலகத்தில் ஆலய பாதுகாப்பு இயக்கம் தமிழ்நாடு சார்பில் புகார் மனு தரப்பட்டது தனிநபர் மற்றும் அறக்கட்டளைகள் மங்கலதேவி கண்ணகி கோவில் நடத்தக்கூடாது என்றும் மேலும் தமிழக அரசு துறை சார்ந்த இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று மனு தந்த பிறகு உத்தமபாளையம் வருவாய்த்துறை அதிகாரிகள் கூட்டம் கூட்டி விழா நடத்துவதற்கான ஏற்பாடு பற்றி பேசியது. ஆனால் இயக்கம் சார்பில் தந்த புகாரை பற்றி அவர்கள் விசாரணை செய்யவில்லை. இதையடுத்து தமிழக அரசு தலைமை செயலாளருக்கும் தேனி மாவட்ட ஆட்சியருக்கும் புகார் மனு அளிக்கப்பட்டது.

வருடா வருடம் வரும் சித்திரா பௌர்ணமியில் கண்ணகி கோவில் திருவிழா நடப்பதற்கு தமிழக அரசின் சுற்றுலா துறை, பண்பாட்டுத் துறை மற்றும் இந்து அறநிலை துறை முதன்மை செயலர் திரு பழனி குமார் ஐஏஎஸ் 30.4.2018ல் மங்கள தேவி கண்ணகி மலைக்கோவிலுக்கு 5 லட்ச ரூபாய் நிதி வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் ஸ்ரீ மங்கலதேவி கண்ணகி கோவில் திருவிழா நடத்தப்படவேண்டும். மேலும் திருக்கோவில் சிதிலமடைந்து உள்ள நிலையில் இருப்பதால் திருப்பணி பணிகளை இந்து சமய அறநிலைத்துறை செய்து தரவேண்டும்.

மங்கலதேவி கண்ணகி கோவில் தமிழ்நாட்டில் உள்ள பாதையில் வரும் பக்தர்கள் செல்லவும் வழிபடவும் அதற்கான வசதிகள் சாலை வசதி குடிநீர் வசதி உணவு வசதி கழிப்பிட வசதி மின்சார வசதி மருத்துவ வசதி போன்றவர்களை செய்து தர வேண்டும்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button