கிக் பாக்ஸிங் குத்துச்சண்டை வீரர்களுக்கு தீவிர பயிற்சி..!
தேசிய கிக் பாக்ஸிங் குத்துச்சண்டை பயிற்சி முகாம் ஏப்ரல்-8 ஆம் தேதி முதல் சென்னைக்கு அருகில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமின் நிறைவு விழா இந்துஸ்தான் பல்கலைக்கழக எம்.ஜி.ஆர் வளாகத்தில் தமிழ் நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
தமிழ் நாடு அமெச்சூர் கிக் பாக்ஸிங் அசோசியேஷன் தற்போது தேசிய அளவில் கிக் பாக்ஸிங் பயிற்சி முகாமை உருவாக்கி வருகிறது. இந்த பயிற்சி முகாமில் கிக் பாக்ஸிங்கை ஒரு தீவிர விளையாட்டு முயற்சியாக ஊக்குவித்து பயிற்சி அளித்தனர். பயிற்சி முகாமில் கலந்து கொண்டு சிறப்பாக கிக் பாக்ஸிங் செய்தவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் இந்துஸ்தான் பல்கலைக்கழக இயக்குனர் அசோக் வர்க்கீஸ், கல்லுரி இயக்குனர் சூசன் மார்த்தாண்டன், மற்றும் முன்னாள் காவல்துறை தலைவர் சந்தோஷ் கே. அகர்வால், தேசிய கிக் பாக்ஸிங் தலைவர் கிஷோர் ஆகியோருடன் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் திருமுருகன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.