விபத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய பறவையை காப்பாற்றிய செய்தியாளருக்கு குவியும் பாராட்டுக்கள்
ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்ட பறவை லெட்டர் விங்ட் கைட் (Letter winged knite) அழிந்து வரும் பறவை இனமான இப்பறவை பார்த்திபனூர் அருகே ராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காயமுற்று பறக்க இயலாத நிலையில் சாலையின் நடுவே உயிருக்கு போராடி கிடந்துள்ளது.
அதிவேகமான போக்குவரத்து நெரிசல் உள்ள இச்சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பறவையை அவ்வழியே சென்ற தனியார் நமது நாற்காலி செய்தி புகைப்பட கலைஞர் ராஜா அடையாளம் கண்டு, பறவையை பாதுகாப்பாக மீட்டுள்ளார். பின்னர் காயமுற்ற பறவைக்கு தண்ணீர் வழங்கி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து பார்த்திபனூரில் இருந்து விரைந்து வந்த வன காவலர் பறவையை பத்திரமாக மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார்.
உலகில் அழிந்து வரும் பறவை இனமான இப்பறவையை உயிரை மீட்பதற்காக செய்தியாளருக்கு நன்றி தெரிவித்த காவலர் பறவைக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அழிந்து வரும் பறவை இனத்தை போக்குவரத்து நெரிசல் மிக்க நெடுஞ்சாலையில் உயிரை துச்சமென நினைத்து பறவையைக் காப்பாற்றிய நமது செய்தியாளரை பலரும் பாராட்டி வருகின்றனர்.