விசப்பூச்சிகளை கட்டுப்படுத்த பொதுமக்கள் போராட்டம்…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சித்தம்பலத்தில் தனியாருக்கு சொந்தமான கோழி தீவனம் தயாரிக்கும் தொழில்சாலை அமைந்துள்ளது. இங்கு கோழிப்பண்ணைகளுக்கு தேவையான தீவணங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நிறுவனத்திற்கு தேவையான மூலப்பொருட்களான சோளம் ஆயிரக்கணக்கான மூட்டைகளில் உடுமலை சாலையில் அமைந்துள்ள சேமிப்பு கிடங்கில் சுகாதாரமற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு வைக்கப்பட்டிருக்கும் சோள மூட்டைகளில் இருந்து விக்ஷப்பூச்சிகள் அதிக அளவில் உற்பத்தியாகி அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் படையெடுத்த வண்ணம் உள்ளது. இதனால் அங்கு குடியிருக்கும் குழந்தைகள் உட்பட அனைவருக்கும் பாதிப்புக்குள்ளாகினர்.
இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் ஒன்றினைந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் முறையிட்டதற்கு உரிய பதில் அளிக்காததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் நிறுவனத்தை முற்றுகையிட்டு அங்கிருந்த ஊழியரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வருவாய் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து முற்றுகையை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
நமது நிருபர்.