சினிமா

சிம்புவின் “வெந்து தணிந்தது காடு” என்னாச்சு….?!

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜசரி கணேஷ் தயாரிப்பில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள “வெந்து தணிந்தது காடு” படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான், கௌதம் வாசுதேவ் மேனன், சிலம்பரசன் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் கிராமத்து இளைஞனாகவும், பின்னர் மும்பைக்கு சென்றபிறகு அவரது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை விவரிக்கும் வகையில், ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ளதாக தெரிகிறது.

படத்தின் பெரும்பகுதி திருச்செந்தூர், சென்னை, மற்றும் மும்பையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்த படத்தின் இசை, டிரெய்லர் வெளியீட்டை மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்த இருப்பதாக தெரியவருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button