தமிழகம்

நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் பாதியிலேயே நின்ற லிப்ட் : 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு 11 பயணிகள் மீட்பு

நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் இரவு 7:45 மணி அளவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் இருந்து வந்த பயணிகள் லிப்ட்டை பயன்படுத்தினர். 5 பெண்கள், ஒரு ஒன்றரை வயது கை குழந்தை உட்பட 11 பேர் பயணித்த அந்த லிப்ட் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியிலேயே நின்றது. சிக்கி இருந்தவர்கள் அதில் ஒட்டப்பட்ட அவசர எண்ணிற்கு தொடர்பு கொண்டு தாங்கள் மின்தூக்கியில் சிக்கியிருக்கும் விபரத்தை ரயில்வே காவலர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக விரைந்து வந்த ரயில்வே காவல் துறையினர் லிப்ட் இரண்டு தளங்களுக்கு இடையில் பாதியிலேயே சிக்கி இருப்பதை கண்டனர். அரை மணி நேரத்தில் மின்தூக்கி பொறியாளர் வரவழைக்கப்பட்டு லிப்டை இயக்கும் பணிகள் நடைபெற்றன.

லிப்டு இடையில் சிக்கியதால் மேல் தரப்பிலிருந்தும் தரைத்தளத்தில் இருந்து மீட்கும் பணிகளுக்காக வீரர்கள் தொடர்ந்து முயற்சி செய்தனர். மின்தூக்கியின் மேல் இருந்த துவாரம் திறக்கப்பட்டதும் சிக்கி இருந்தவர்களை வீரர்கள் கயிறு மூலம் மீட்டனர். முதலில் பெண் குழந்தையை மீட்ட தீயணைப்பு வீரர்கள் தொடர்ச்சியாக அனைவரையும் மீட்டனர். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் நிலையில் அங்கு மின்தூக்கி பராமரிப்பதற்கு ஊழியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை என பயணிகள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டு வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button