தலைமை ஆசிரியரை மிரட்டிய ஆசிரியர்..! : நடவடிக்கை எடுக்கப்படுமா..?
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் (இ) படப்பை, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 711 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 14 ஆசிரியர், ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1.3.2022 அன்று இரவு 7.30 மணியளவில் ராஜராஜேஸ்வரி என்கிற ஆசிரியை திருக்கழுக்குன்றத்திலிருந்து பணிமாறுதல் பெற்று நான்கு பேருடன் பள்ளிக்கு வருகை தந்து தலைமை ஆசிரியை சரஸ்வதியை கட்டாயப்படுத்தி பள்ளியை திறக்க வைத்து பணியில் சேர்ந்ததாக வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு சென்றதாக அப்பகுதியிலிருந்து நமக்கு தகவல் வந்தது.
இதையடுத்து நமது செய்தியாளர் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை சரஸ்வதியிடம் விசாரித்த போது, நான் பள்ளியை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்று விட்டேன். இரவு 7.30 மணிக்கு ராஜராஜேஸ்வரி என்கிற இடைநிலை ஆசிரியை உள்ளிட்ட நான்குபேர் பள்ளியில் காத்திருப்பதாக கூறி எனது கைபேசியில் பேசி என்னை பள்ளிக்கு வருமாறு அழைத்தனர். நான் காலையில் வாருங்கள் என்று கூறியும் என்னை பள்ளிக்கு வருமாறு வற்புறுத்தினர். அதில் ஒருவர் எனது வீட்டிற்கே வந்து என்னை அழைத்துச் சென்றார். நான் உதவி கல்வி அலுவலர் முருகனிடம் பேசினேன். அவர் உத்தரவின் பேரில் தான் 1.3.2022 அன்று காலை, மாலை என இரண்டுவேளை வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட அனுமதித்தேன். ஏன் நாளை காலையில் பணியில் சேர வேண்டியதுதானே என கேட்ட போது எனது மாமனாருக்கு மருத்துவசிகிச்சை பெறுவதற்காக நான் இன்று வெளிநாடு செல்கிறேன். எனது இடத்தில் வேறு யாரையாவது தற்காலிக பணியில் அமர்த்திக் கொள்ளுங்கள். நான் அவருக்கு சம்பளம் கொடுத்துவிடுகிறேன். தற்போது எனக்கு விமானத்திற்கு நேரமாகிவிட்டது. மற்றதை போனில் பேசிக் கொள்ளலாம் எனக்கூறி அவசரமாக கிளம்பிவிட்டார்.
இதுசம்பந்தமாக எனது உயர் அதிகாரி அனுமதியுடன் தான் நான் அந்த ஆசிரியை ராஜராஜேஸ்வரியை பணியில் சேர அனுமதித்தேன். அவர் வெளிநாடு செல்வதற்கான அனுமதி கடிதம் என்ஓசியை கொடுத்து அனுப்புவதாக கூறினார். கிணிளி முருகன் அனுமதிக்க கூறியதால் நான் வேறு எதுவும் கேட்கவில்லை என்றார்.
இதேபோல் சுதா என்கிற அறிவியல் ஆசிரியை இதே தேதியில் சாலமங்கலம் பள்ளியிலிருந்து பணிமாறுதலாகி இந்தப் பள்ளியில் பணியில் சேர்ந்துள்ளார். இந்தப் பள்ளியில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் என்னால் இங்கு பணிபுரிய முடியாது. நான் பள்ளிக்கல்வித்துறை தலைமை அலுவலகமான டிபிஐக்குச் சென்று துணை இயக்குனரிடம் பேசிக் கொள்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். இதுநாள் வரை பணிக்கு வரவில்லை என தெரியவருகிறது.
ஆசிரியப் பணி அறப்பணி என்பதை உணர்ந்து பள்ளிக்கு வந்து மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்த வேண்டிய ஆசிரியைகள் கடமையை மறந்து பள்ளிக்கு வராமல் ஒருவர் வெளிநாட்டிற்கு ஆறுமாதம் சுற்றுலா செல்வதும், இன்னொருவர் டிபிஐயில் பேசிக் கொள்வதாகவும் கூறிவிட்டு சென்றதால் பாதிக்கப்படுவது மாணவர்கள் தான். வெளிநாடு சென்றுள்ள ஆசிரியை ராஜராஜேஸ்வரி தனது மாமனாருக்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக செல்கிறேன் என்று கூறுகிறார். ஆனால் முறைப்படி பள்ளிக்கல்வித்துறை அதிகாரி வழங்கிய தடையில்லாச் சான்று (ழிளிசி) தலைமை ஆசிரியையிடம் கொடுத்து இந்தப் பள்ளியிலிருந்து தலைமை ஆசிரியை விடுவித்தவுடன் தான் வெளிநாடு சென்றிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் பணியில் சேர்ந்ததாக கையெழுத்திட்டுச் சென்றிருக்கிறார்.
ராஜராஜேஸ்வரி தனக்கு இருக்கிற பணபலத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்தித்தான் வெளிநாடு சுற்றுலா செல்வதற்கு சம்பளத்துடன் கூடிய தடையில்லாச் சான்று (NOC) பெற்றிருப்பார் என்கிற சந்தேகம் வலுக்கிறது. இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்திருப்பார்களோ என எண்ணத்தோன்றுகிறது.
ஆகையால் இதுசம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலையிட்டு நேர்மையான அதிகாரியை விசாரணை அதிகாரியாக நியமித்து விசாரணை செய்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– சதீஸ்முத்து