மதுரை வடக்கு மாவட்ட தேமுதிக மாவட்ட அவைத் தலைவர் விபிஆர் செல்வக்குமார், அவரது மனைவி ஜெயந்தி செல்வக்குமார் தம்பதியர் இருவரும் தங்கள் பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்வதோடு மட்டுமல்லாமல் தங்கள் ஏரியா முழுவதும் புகார் பெட்டிகளை வைத்து மக்களின் குறைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவது, ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சியினர் யாரும் செய்யாத புதுமையான இந்த விஷயத்தை இவர்கள் செய்ததால் மக்களின் பாராட்டுக்களையும் நன்மதிப்பையும் பெற்று இருக்கிறார்கள்.
இவர்களின் செயலை பாராட்டி நமது குழுவினரும் நேரில் சென்று தீபாவளி வாழ்த்துக்களை கூறி புதுமை தம்பதியரிடம் பேசியபோது, கேப்டன் விஜயகாந்த் பல வருடங்களாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். தனது ரசிகர்களை சுயநலத்திற்காக பயன்படுத்தும் சில நடிகர்களுக்கு மத்தியில் தன்னை பார்க்க வரும் நடிகர்களை அன்போடு வரவேற்று, உணவு அளித்து, தன் அருகே அழைத்து போட்டோ எடுத்து போக்குவரத்து செலவுக்கு பணம் கொடுத்து அனுப்பி வைப்பார். நெசவாளர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக எப்போதும் கதர் ஆடைகளை அணிவதையே விரும்பினார். கேப்டனின் இனிக்கும் இளமை, தூரத்து இடி முழக்கம், சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, அம்மன் கோவில் கிழக்காலே, பூந்தோட்ட காவல்காரன், கேப்டன் பிரபாகரன் போன்ற பல வெற்றிப்படங்களைத் தந்தவர்.
அந்தப் படங்களைப் பார்க்கும் பொழுது அன்றே அவருக்கு கேப்டனின் ரசிகனாகி இன்று வரை கேப்டனின் தொண்டனாக மக்களுக்கு பணியாற்றி வருவது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. ஆரம்ப காலத்தில் விபிஆர் செல்வக்குமார் ஆகிய நான் விஜயகாந்தின் ஆணைக்கிணங்க ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருகிறோம். தமிழ்நாடு நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கத்தில் மாநில் பொதுச்செயலாளராக செயலாற்றி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்டங்கள், மருத்துவமுகாம், நடத்தி மக்களின் நன்மதிப்பை பெற்று கேப்டனால் ஈர்க்கப்பட்டு 2007 ஆம் ஆண்டு மாவட்ட தொண்டரணி துணைச்செயலாளராக கட்சிப் பணியை தொடங்கி சென்னையில் நடைபெற்ற முதல் இளைஞர் அணி மாநாட்டில் அதிக இளைஞர்களுடன் கலந்து கொண்டு சிறப்பித்த பெருமை எங்களுக்கு உண்டு. அதன்பிறகு பல்வேறு மாநாடுகளில் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறோம். கேப்டனின் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக வெகுவிமரிசையாக இன்று வரை கொண்டாடி மகிழ்ந்து வருகிறோம்.
எனது துணைவியார் ஜெயந்தி செல்வக்குமார் என்னுடன் கட்சிப் பணிகளிலும் பணியாற்றியுள்ளார். மகளிர் சுய உதவிக்குழு மூலம் பல உதவிகளை செய்து வருகிறார். எங்கள் பகுதிகளில் அதாவது லூர்து நகர், காந்திபுரம், லெட்சுமி நகர் மாதா கோயில், வ.உ.சி.தெரு உள்ளிட்ட பகுதிகளில் புகார் பெட்டி வைத்து மக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். இருவரும் இணைந்து பகுதி மக்களுக்கு பல்வேறு சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறோம். தமிழக மக்கள் அனைவரும் சந்தோஷமாகவும், உற்சாகமாகவும், தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ எங்களது வாழ்த்துக்கள் என்றனர். நமது குழுவினரும் புதுமை தம்பதியினருக்கு வாழ்த்துக்களைகூறி விடை பெற்றனர்.
– பாஸ்கர்