தமிழகம்

2,900 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி வழங்கும் திட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொற்கரங்களால், சென்னை மாவட்டத்தை சார்ந்த 2,900 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக, 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவித் தொகையுடன் 8 கிராம் தங்க நாணயத்தை 13.01.2022 அன்று காலை தலைமைச் செயலகத்தில் வழங்கினார்கள்.

அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு அவர்கள், ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை மாவட்டத்தைச் சார்ந்த 100 பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயத்தினை 13.01.2022 அன்று வழங்கினார்கள்.

திருமண நிதியுதவி திட்டம் என்பது திருமணத்திற்காக நிதியுதவி மற்றும் திருமாங்கல்யம் செய்ய தங்க நாணயம் அளிக்கும் வகையிலும், பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும் செயல்படுத்தப்படும் தலையாயத் திட்டமாகும்.

இத்திட்டமானது, ஏழைப் பெற்றோரின் மகள், ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்து கொள்ளும் விதவையர், விதவையரின் மகள், கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர் ஆகியோர் பயன்பெறும் வகையில் ஐந்து வகையான திட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பட்டதாரி அல்லாத பெண்களுக்கு ரூ.25,000/- நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம், பட்டம் பட்டயப் படிப்பு படித்த பெண்க ளுக்கு ரூ.50,000/- நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், 2021-2022ஆம் நிதியாண்டில் சென்னை மாவட்டத்தில் பட்டம் பட்டயப்படிப்பு படித்த 2,149 பெண்களுக்கு ரூ.50,000/ வீதம் ரூ10.75 கோடி திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம், பட்டம் பட்டயப்படிப்பு அல்லாத 751 பெண்களுக்கு ரூ.25,000/- வீதம் ரூ.1.88 கோடி திருமண நிதியுதவி மற்றும் தலா 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில், துணை ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் எஸ்.மனிஷ், இ.ஆ.ப., அவர்கள், மாநகர மருத்துவ அலுவலர் டாக்டர் எம்.எஸ்.ஹேமலதா அவர்கள், குழந்தைகள் நல இணை இயக்குநர் திருமதி பி.சுந்தரி அவர்கள், மாவட்ட சமூக நல அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button