கொடைக்கானல் நகராட்சி அலட்சியம் ! நட்சத்திர ஏரியில் மனித கழிவுகள் … கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம் !
திண்டுக்கல் மாவட்டத்திற்கே, “அழகு” சேர்க்கும் மலைகளின் இளவரசியாய் திகழும், “கொடைக்கானல்” தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.
தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து நாட்டில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு அதிகம் வந்த வண்ணம் உள்ளனர். கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் இயற்கையின் “எழில்” சூழ்ந்து வண்ண தோரணங்களாய் காட்சியளிக்கும், அதிலும் கொடைக்கானல் நகரின் மத்தியில் அமைந்திருக்கும் நட்சத்திர ஏரி சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் ஒரு முக்கியமான இடமாகும். ஏரியில் படகு சவாரி செய்யும்போது அக்கறையின் இயற்கை காட்சிகளை நேரடியாக பார்க்க முடிகிறது, மேலும் படகு சவாரி செய்யும் போது ஒருவருக்கொருவர் தண்ணீரை வாரி தெளித்து, உற்சாகத்தில் விளையாடும் , சிறப்பு வாய்ந்த நட்சத்திர ஏரி, சில தினங்களுக்கு முன்பாக நட்சத்திர ஏரியை சுற்றியுள்ள தனியார் சொகுசு விடுதிகள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், மனிதகழிவுகளை இரவு நேரங்களில் நட்சத்திர ஏரிக்குள் விடுவதாகவும், மழைக்காலங்களில் கழிவுநீர், மற்றும் சாக்கடை நீரை நேரடியாக நட்சத்திர ஏரிக்குள் விடுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு வந்து உள்ளது. ஏரியை பராமரிப்பு செய்பவர்களும் நகராட்சி ஆணையரும் கண்டு கொள்ளவில்லை,
இதைத்தொடர்ந்து கடந்த சில தினங்களாக ஏரியில் மனித மலம் மிதப்பதால் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து பாதியிலேயே திரும்பி விடுகின்றனர். உற்சாகமாய் படகு சவாரி செய்ய வருபவர்கள் மனித மலம் மிதப்பதையும், செடி கொடிகள் சூழ்ந்து இருப்பதையும், கண்டு முகம் சுளித்து கொண்டு ஓடிவிடுகின்றனர்.
மேலும் ஏரியை சுற்றிலும் மது பிரியர்கள் மதுவை அருந்திவிட்டு பாட்டில்களை ஆங்காங்கே வீசி விட்டுச் செல்வதால் கண்ணாடிகள் உடைந்து துண்டு துண்டுகளாய் கிடக்கின்றது. இதனால் நட்சத்திர ஏரியில் நடந்து செல்பவர்கள் ஆபத்தின் விளிம்பில் செல்கின்றனர். மேலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், “தூய்மை பணிக்காக கடந்த காலங்களில் 88 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது, ஆனால் தூய்மைப்படுத்தும் பணி எதுவும் நடக்கவில்லை.
மேலும் ஏரியில் இருக்கும் பாஷாணங்களை அளிப்பதற்காக கிராஸ்கட் டேடு மீன்கள் விட வேண்டும். ஆனால் கடந்த 5 வருடங்களாக மீன்கள் விடுவதில்லை.மற்றும் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நிலுவையில் உள்ளது.. இந்த நட்சத்திர ஏரியில் இருந்து பல லட்சம் வசூல் மட்டும் செய்யும் நகராட்சி நிர்வாகம் நட்சத்திர ஏரியை கண்டுகொள்வதும், இல்லை பராமரிப்பதும் இல்லை.
விரைவில் ஏரியை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.