கொடைக்கானல் சாலைகளின் அவலநிலை..! : கண்டுகொள்ளுமா நெடுஞ்சாலைத்துறை…
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் ஒரு சர்வதேச சுற்றுலா தளம். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும். கொடைக்கானலுக்கு வெளி ஊர்களில் இருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் வருடம் முழுவதும் பல சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
கொடைக்கானலில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் சுற்றுலா பயணிகளையே நம்பியே உள்ளது. சர்வதேச சுற்றுலா தளம் என்கிற பெயருக்கு ஏற்ப இங்கு உள்ள சாலைகளில் கட்டமைப்பு இல்லாமல் இருந்து வருகிறது. பெருமாள் மலையில் இருந்து கொடைக்கானல் நகர் வரை உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. வாகனங்களில் பயணிக்க தகுதியற்ற சாலைகளாக இருக்கின்றன. அதேபோல் கொடைக்கானல் நகர் பகுதியில் லேக் ரோடு பகுதியில் இருந்து நாயுடுபுரம் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. அதேபோல் லேக் பகுதியிலிருந்து அப்சர்வேட்டரி செல்லும் சாலையும் இதே நிலைமை மிகவும் மோசமாக இருந்து வருகிறது. கிராம பகுதியான வில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பெரும்பள்ளம், சின்னபள்ளம் சாலைகளும் மிகவும் மோசமாக இருக்கின்றது.
கொடைக்கானல் கிராம, நகரப்பகுதிகளில் உள்ள சாலைகளில் மோசமான நிலையினால் வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் வாகனங்களில் பயணிக்கவே தகுதியற்ற சாலைகளாகவே உள்ளது. ஆம்புலன்ஸ் வாகனங்களும் வேகமாக செல்ல முடியாத சாலைகளாக உள்ளது. மேலும் கடந்த வாரம் நடந்த இருசக்கர வாகன விபத்தில் கொடைக்கானல் நகரை சேர்ந்த மோகன் என்பவரும் மற்றொரு இருசக்கர வாகன விபத்தில் கொடைக்கானல் போக்குவரத்து காவல் நிலைய முதல்நிலைக் காவலர் பாலசுப்பிரமணி என்பவரும் விபத்தினால் உயிரிழந்துள்ளனர்.
மோகன் பாலசுப்பிரமணி
கொடைக்கானல் சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் பலமுறை நெடுஞ்சாலைத் துறையினர் இடமும், நகராட்சி துறையினரிடமும், கிராம ஊராட்சி துறையினரிடமும் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெயரளவில் சாலைகளை பழுது பார்க்கின்றனர். மேலும் இருசக்கர வாகன விபத்தினால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மேலும் கொடைக்கானல் நகராட்சிக்குட்பட்ட சாலைகளையும் சீரமைக்க வேண்டும். அதுபோல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதி சாலைகளையும், நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
மனித உயிர்களின் மதிப்பை அறிந்து அரசு அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து புதிய சாலைகளை அமைக்க வேண்டும்என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
– A.முகமது ஆரிப்