மாறுபட்ட சிந்தனைகளைக் கொண்ட பத்திரிகையாளர்கள் சங்கமித்த ‘நுண்ணறிவு’ விழா
நுண்ணறிவு மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பத்திரிகை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு ஜெர்னலிஸ்ட் யூனியன் தலைவர் காளிதாஸ், சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன், தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார், ஆல் இந்தியா பிரஸ்மீடியா சங்கத்தின் தலைவர் வேல்முருகன் மற்றும் ரஞ்சித் பிரபாகர், ஊடக உரிமைக்குரல் சங்கத்தின் முன்னாள் தலைவர் ராபர்ட் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விழாவில் வெவ்வேறு சிந்தனைகளைக் கொண்ட பத்திரிகை ஆசிரியர்களை ஓர் இடத்தில் சந்திக்க வைத்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. பத்திரிகையாளர்களின் ஒற்றுமைக்கு இந்த விழா ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது. பெரும்பாலும் ஒரு விழா என்றால் பிரபலங்களையும், சினிமாக்காரர்களையும் வைத்துத்தான் பெரும்பாலான விழாக்கள் நடைபெறுகின்றன. ஆனால் இந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் பத்திரிகை ஆசிரியர்களும் பத்திரிகையாளர் சங்கங்களின் நிர்வாகிகளும் தான். அதனால் இந்த விழாவில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்களுக்கு ஒரு பயிற்சி பட்டறை போலவே அமைந்ததால் இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மாறுபட்ட சிந்தனையாளர்களைக் கொண்ட பத்திரிகை ஆசிரியர்களையும், பத்திரிகை சங்கங்களின் தலைவர்களையும் ஓர் இடத்தில் சங்கமிக்க ஏற்பாடு செய்த தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் தலைவர் சரவணன், நுண்ணறிவு பத்திரிகை ஆசிரியர் சிவக்குமார் ஆகிய இருவரையும் விழாவிற்கு வருகை தந்த அனைவரும் பாராட்டியும், வாழ்த்து தெரிவித்தும் சென்றனர்.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்த நுண்ணறிவு ஆசிரியர் சிவக்குமார் மற்றும் நுண்ணறிவு குழுமத்திற்கு மட்டுமல்லாது விழாவில் கலந்து கொண்ட அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் இந்த விழா மறக்க முடியாத விழாவாகவே அமைந்தது.