தமிழகம்தமிழகம்

கட்டவிழ்த்துவிடப்பட்ட கஞ்சா விற்பனை…
குற்றவாளிகளின் கூடாரமாகிறதா திருப்பூர்?
திடுக்கிடும் அதிர்ச்சி ரிப்போர்ட்…

திருப்பூர் மாவட்டத்தின் பெயரை தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள். வந்தோரை வாழ வைக்கும் நகரம். பின்னலாடை உற்பத்தியில் ஆண்டொன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடி அளவிற்கு அன்னிய செலாவணியை ஈட்டி வருகிறது.

உழைப்பாளிகளின் நகரமான திருப்பூரில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பின்னலாடை தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் திருப்பூரில் தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்கள் மற்றும் வெளி நாட்டில் இருந்து இங்கு வந்து தங்கி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தொழிலாளர்களை குறி வைத்து போதை பொருட்களை விற்கும் கும்பலும் ஊடுருவி திருப்பூர் குற்றவாளிகளின் கூடாரமாக மாறிவிடும் சூழல் உருவாகியுள்ளது. தாராளமான கஞ்சா விற்பனை, அண்டை மாநிலத்தில் இருந்து ஹான்ஸ், குட்கா போன்ற போதைபொருட்களை சட்டவிரோதமாக கடத்தி வந்து அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

மேலும் திருப்பூரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழிப்பறியில் ஈடுபடுவது பொதுமக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் வே.வனிதா உத்தரவின் பேரில் துணை ஆணையர் செ.அரவிந்த் மேற்பார்வையில் உதவி ஆணையர்கள் அனில்குமார் மற்றும் மகேந்திரன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து திவிர ரோந்து மற்றும் சோதனைகள் மேற்கொண்டனர். அப்போது நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை வீடுகளில் புகுந்து கொள்ளை சம்பவங்களும், அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை செயின் பறிப்பு சட்டவிரோத கடத்தல் சம்பவங்களும் நடைபெறுவது தெரியவந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் 29 ஆம் தேதி கஞ்சா கடத்தி வந்த கும்பலிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தேனி மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வந்து இங்குள்ள வியாபாரிகளுக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.

இதனை அடுத்து தனிப்படையினரின் தீவிர வாகன சோதனையில் சந்தேகத்திற்கிடமான காரை சோதனையிட்டதில் காரில் ரூபாய் 40 லட்சம் மதிப்புள்ள 350 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து சட்டவிரோதமாக கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து காரையும் காரில் கடத்திவரப்பட்ட 350 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து காரை ஓட்டி வந்த தேனி மாவட்டம் மேகமலை காந்தி கிராமத்தை சேர்ந்த பால்பாண்டி(27) என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் தேனி மற்றும் திருப்பூரில் உள்ள வியாபாரிகளுக்கு விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் கடத்தலில் தொடர்புடைய கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூரில் நடைபெறும் செல்போன் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் கைப்பற்றப்படும் பைக்குகள் பெரும்பாலும் திருட்டு வாகனங்களாகவே இருப்பதாக தெரிவித்தார். மேலும் பிடிபடும் நபர்கள் குற்றச்சம்பங்களில் ஈடுபடுபோர் பெரும்பாலும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனவும், புதிய ஆட்கள் அன்றாட போதைக்கு ஆசைப்பட்டு தற்போது திருப்பூரில் குற்றச்சம்பவத்தில் ஈடுபபடுவதால் குற்றவாளிகளை கண்டறிவதில் பெரும் சாவால்கள் இருப்பதாக தெரிவித்தார்.

திருப்பூரில் அதிக வாடகைக்கு ஆசைப்பட்டு வெளி மாவட்ட, மாநிலத்தை சேர்ந்த அறிமுகமில்லாதவர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுப்பவதை தவிர்ப்பதும், புதிதாக திருப்பூரில் குடியேரும் நபர்கள் குறித்து அந்தந்த கிராம நிர்வாக அலுவரிடம் தங்கள் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை வீட்டு உரிமையாளர்கள் பதிவு செய்யும் முறையை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தினால் குற்றவாளிகளின் கூடாரத்தை அடியோடு ஒழிக்க முடியும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button