ஆய்வாளரினால் மீண்டும் விபத்து!? தடுக்கப்படுமா?
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் மாடுகளை, ஏற்றிச் செல்லும் வாகனங்கள், எல்லாம் நீளம் அகல அளவுகளில், விதிகளை மீறி உள்ளது. இதனால் விபத்துக்கள் அதிகரிக்கிறது என்பதை அதிகாரிகளின் கவனத்திற்கு நாம் புகாராக பதிவு செய்ததை தொடர்ந்து அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது.
அதில் TN 57 AW 9394 என்ற வாகனத்திற்கு, CFX கொடுத்து விட்டதால், அதற்கு பதில் TN 57 AP 4343 என்ற மற்றொரு வாகனத்தை வாடகைக்கு எடுத்து மாடு ஏற்றி மாநிலம் விட்டு மாநிலம் கொண்டு சென்று இறக்கி வந்தார் இந்த வாகனத்தின் உரிமையாளர்.
எதோச்சையாக ஒரு மண்டல போக்குவரத்தின், உயர் அதிகாரி ஒருவர் சாலையில் நின்று ஆய்வு செய்த போது, இந்த வாகனம் ((TN 57 AP 4343) மாடு ஏற்றி சென்றபோது, அதனை ஆய்வு செய்துள்ளார். அதன் விதிமீறல் அளவுகளை கண்டு, உடனே தகுதிச் சான்றிதழை ரத்து செய்து உத்திரவிட்டு சென்று விட்டார்.
இதன் தொடர்ச்சியாக ஆய்வாளர் பூங்குழலி, வழக்கம் போல், பெற வேண்டிய லஞ்சத்தை பெற்றுக் கொண்டு,FC ரத்து செய்யப்பட்ட வாகனத்தில் இருந்த மாடுகளை எல்லாம் ஏற்கனவே தகுதிச் சான்றிதழ் ரத்து செய்யப்பட்ட வாகனமான (TN 57 AW 9394) அந்த வாகனத்தில் மாடுகளை ஏற்ற சொல்லி அனுமதியளித்துள்ளார்.
FC . ரத்து செய்யப்பட்ட TN 57 AW 9394 என்ற வாகனம், ஒட்டன்சத்திரம் “டு”தாராபுரம் சாலையில் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள “கள்ளிமந்தையம்“ என்ற இடத்தில் இருந்து மாடுகளை ஏற்றிக் கொண்டு இப்போது கேரளா மாநிலத்திற்கு சென்று கொண்டுள்ளது.
CFX கொடுக்கப் பட்ட வாகனத்தின் ஆவணங்கள் எல்லாம் ஆய்வாளர் கையில் இருக்கும். வாகனமும் சிறை பிடிக்கப்பட்டு காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும்.மேலும் அடுத்து தகுதிச் சான்றிதழ் பெற ஆய்வுக்காக கொண்டு வருவதற்காக, பட்டறை பணிகளுக்காக போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை அனுமதியோடு குறிப்பிட்ட நிபந்தனைகளோடுதான் வாகன நிர்வாகிகளிடம் வாகனம் ஒப்படைக்கப்படும். அப்படியிருக்கையில் இந்த வாகனத்தின் ஆவணங்கள் அனைத்தும் தற்போது புரோக்கர் கையில் ஆய்வாளர் கொடுத்து வைத்திருப்பது ஏன்?
CFX கொடுக்கப்பட்டு தகுதிச் சான்றிதழ் ரத்து செய்யப்பட்ட பின் அதிகபட்சம் இருபது நாட்களுக்குள், மீண்டும் FC -எடுக்கப்பட வேண்டும். அனால் இதை எதையுமே செய்யாத போது, மேற்கண்ட வாகனத்தில் மாடுகளை ஏற்றிச் செல்ல ஆய்வாளர் அனுமதியளித்தது ஏன்?
முறையான ஆவணங்கள் இல்லாமலும், FC புதுபிக்கப்படாமல் சாலையில் தொடர்ந்து இரண்டு மாதங்களாக ஒடிக்கொண்டிருக்கும் வாகனத்தால் விபத்து ஏற்பட்டால், பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரணங்களை எப்படி பெற முடியும்?
எனவே முறையற்ற இந்த சாலைப் பயணத்தை தடுத்து, விபத்து ஏற்படா வண்ணம் தடுக்க பொள்ளாச்சி போக்குவரத்து சோதனைச்சாவடியிலோ அல்லது போக்குவரத்து பறக்கும் படையினரோ, ரோந்து பணியில் உள்ள காவல் துறையினரோ, உரிய நடவடிக்கை எடுத்து, கேரளாவுக்கு சென்று கொண்டிருக்கும் இந்த வாகனத்தை உடனே சிறை பிடித்தால் மட்டுமே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் தடுக்க முடியும். சாலையை அடைத்துச் செல்லும் அகலத்திற்கு ஆய்வாளர் பூங்குழலி எப்படி தகுதிச் சான்று வழங்கினார்?
நமது புகாருக்கு பின் உயரதிகாரிகளின் நடவடிக்கையின் பேரில் அவரே, தகுதிச்சான்றிதழை ரத்து செய்து விட்டு, மீண்டும் எந்த வித ஆவணங்களும் இல்லாமல் மாடு ஏற்றிச் செல்ல அனுமதி அளித்திருப்பது எல்லாம் வெறும், லஞ்ச பணத்திற்காக ….
சிறைபிடித்ததில் இருக்க வேண்டிய வாகனம், சாலை பயணத்தில் செல்ல அனுமதித்தது எப்படி? மனித உயிர்கள் இந்த ஆய்வாளர் பூங்குழலிக்கு அவ்வளவு மலிவாகி விட்டதா… அரசின் போர் கால நடவடிக்கையாக இது பாயுமா?
– நெல்லை கோபால்