அரசியல்

அதிமுக ஆட்சியில் மருத்துவர்களுக்கு உணவு வழங்கியதில் முறைகேடு !

கொரோனா ஆய்வுப்பணி தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது தமிழக அரசு. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு வருகை தந்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பரமக்குடி அரசு மருத்துவமனை , போகலூர்ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டார். பின்பு மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களிடம் கொரனோ சிகிச்சைகள் குறித்தும், தடுப்பூசி போடுவது குறித்தும் கேட்டறிந்தார். அதன்பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசும்போது…

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொரோனா ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இரண்டு மாதங்களில் 32வது மாவட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று மிக குறைந்த அளவில் வந்துள்ளது. தி.மு.க .ஆட்சிக்கு வந்தவுடன் 25 ஆயிரத்து 465 என்கின்ற பெரிய அளவில் தொற்று இருந்தது. பின்பு 36 ஆயிரத்து 154 ஆக உயர்ந்துள்ளது. அதற்காக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா தொற்று குறைந்த மாவட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. 3,700 பேர் கரும் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருவர் மட்டும்தான் பாதிக்கப்பட்டுள்ளார்.அவரும் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவ சேவை மிகச் சிறந்த முறையில் உள்ளது.

கடந்த ஆட்சியில் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் உணவு வழங்கிய வகையிலும், அவர்களுக்கு தங்கும் இடம் வழங்கிய வகையிலும், மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது.தற்போது தி.மு.க. ஆட்சியில் நாள் ஒன்றுக்கு ரூ. 30 லட்சம் செலவு குறைக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் யாரும் இல்லாமல் தரமான முறையில் உணவுகள் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் வழங்கப்படுகிறது. கடந்த ஆட்சியில் பெருந்தொகை இடைத்தரகர்களுக்கு சென்றது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜிகா வைரஸ் என்பது டெங்கு காய்ச்சலை போன்றதுதான். அதற்கு தீவிரமாக கொசு மருந்து அடிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை தமிழக சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது .உள்ளாட்சி அமைப்புகளிலும் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கன்னியாகுமரியில் ஒரு கர்ப்பிணித் தாய்க்கு அந்த வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது அவரும் பிரசவம் ஆகி குழந்தையோடு நலமுடன் உள்ளார்.

ஒன்றிய அரசை ஒன்றிய அரசு என்றுதான் அழைக்க வேண்டும்.தி.மு.க. மட்டும் ஒன்றிய அரசு என அழைக்கவில்லை. பா.ஜ.க.வை சேர்ந்த புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூட ஒன்றிய அரசு என்றுதான் கூறியுள்ளார். மாவட்ட மருத்துவ கல்லூரியும் மாவட்டமருத்துவமனையும் வெவ்வேறு இடங்களில் இருப்பது தான் நல்லது. அதற்காகத்தான் இந்த ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.தேசிய சுகாதார மேலாண்மை இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி ஆய்வு செய்தபிறகு பொது மருத்துவமனை குறித்து முடிவு செய்யப்படும். 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடப்பது குறித்து ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரிடம் ஒரு வார காலத்திற்குள் பேச உள்ளோம். அவரிடம் பேசி முடிவெடுத்து பின்பு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button