அரசியல்தமிழகம்தமிழகம்

இராணுவ வீரர்களின் இறுதிச் சடங்கில் ஆளுநர் கலந்து கொள்ளாதது ஏன்?

இந்தியாவில் இராணுவம், விமானம், கடற்படை ஆகிய மூன்று படைகளுக்கும் தனித்தனி தளபதிகள் இருந்து வருகிறார்கள். இந்த முப்படைகளுக்கும் தளபதியாக ஜனாதிபதி இருந்து வருகிறார். காலங்கால இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வந்தது. இந்த நடைமுறையை மாற்றி துறையைப் பற்றி நன்கறிந்த ஒருவரை தலைமை தளபதியாக நியமனம் செய்ய வேண்டும் என்று கடந்த 2019&ம் ஆண்டு, பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது பா.ஜ.க. அரசு.

அதன் பிறகு 2020 ஜனவரி முதல் தேதியில், ராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்த பிபின் ராவத், முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இவர் ஒட்டு மொத்த இந்தியாவிற்கான பாதுகாப்பை கவனித்து வரும் முக்கியமான பதவியை வகித்து வந்தவர்.

நீலகிரியில் நடந்த விமான விபத்தில், முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மரணம் அடைந்த துயரமான செய்தி அறிந்ததும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கோண்டார்.

இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, விபத்து நடைபெற்ற நீலகிரிக்குச் சென்று, அந்த இடத்தை பார்வையிட்டு, உயரிழந்த இராணுவ தளபதி உள்ளிட்ட இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொள்வார் என்று மக்கள் மத்தியில் பேசப்பட்டது.

ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அரசின் பிரதிநிதி, உளவுப்பிரிவின் சிறப்பு இயக்குனநாரக பதிவு வகித்து ஓய்வு பெற்றவர். நாகாலாந்து மாநிலத்தில் தீவிரவாதிகளோடு பேச்சு வார்த்தை நடத்தி, தீவிரவாதத்தை அடக்கிய உயரதிகாரியாக பொறுப்பு வகித்தவர். பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தையும் தெரிந்த தமிழக ஆளுநர், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட இராணுவ வீரர்கள் மரணமடைந்த செய்தி கிடைத்ததும், அங்கு சென்று இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருக்கலாம்.

இந்தியாவில் உள்ள அனைவரும் முப்படைகளின் தலைமைத் தளபதி உள்ளிட்ட, இராணுவ வீரர்களின் மரணத்தால் துக்கம் அனுசரித்துக் கொண்டிருந்தினர். காங்கிரஸ் தங்களது கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒத்தி வைத்தது. தமிழகத்தில் எதிர்கட்சியாக இருக்கும் அதிமுக நடத்த இருந்த ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்தது. நீலகிரியில் இராணுவ வீரர்களுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட, இராணுவ தளபதிகள் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஸ்ரீரங்கம் கோயிலில் யானைகள் வரவேற்புடன் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

இந்திய நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதி பொறுப்பில் இருப்பவர், விபத்தில் மரணம் அடைந்ததால், மத்திய, மாநில அரசுகள் நிகழ்வுகளை ஒத்தி வைத்த போது, மத்திய அரசின் பிரதிநிதியான தமிழக ஆளுநர் தனது நிகழ்வுகளை ஒத்திவைத்து விட்டு இராணுவ தளபதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் படைகளின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்த ஆளுநர், கோயிலில் வழிபாட்டிலும், பட்டமளிப்பு விழாவையும் புறகணித்திருக்க வேண்டும் என பொதுமக்கள் பேசி வருகிறார்கள்.

  • சூரியன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button