குதிரை சவாரி செய்தால் கொரோனா பரவாதா….! பல்லடத்தில் பரபரப்பு
பல்லடத்தில் குதிரை சவாரி கொரானா பரவாது…
திருப்பூரில் கடந்த பல நாட்களாக கொரானா தொற்றின் பாதிப்பு ஆயிரத்தை கடந்துவிட்ட நிலையில் தற்போது தமிழக அரசு திருப்பூர் மாவட்டத்திற்கு ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அவசியமின்றி வெளியே வாகனங்களில் சுற்றி திறிவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் விபரீதம் தெரியாமல் ஊரடங்கு விதிகளை மீறி குதிரை மீதேறி சவாரி செய்து சாலையில் சாகசம் செய்துவருவது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாலையில் அருள்புரம் பகுதியில் ஊரடங்கு நேரத்தில். இளஞர்கள் சிலர் பல்லடம் சாலையில் அதிவேகமாக குதிரையில் சவாரி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் எந்த வித பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமலும், முகக்கவசம் அணியாமல் சவாரி செய்து சாகசம் செய்து வருவது தொடர்ச்சியாக நடைபெற்றுவருவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் குதிரைக்கு பின்னால் செல்லும் இளைஞர்கள் ஒரு இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் செல்கின்றனர். எனவே இது போன்று பொது இடஙகளில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதோடு விதிமுறைகளை மீறி குதிரை சவாரி செய்து சாகசம் செய்யும் இளைஞர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்