பெண் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக திகழும் மின்னும் நட்சத்திரம் செல்வி சேத்தனா
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த மருத்துவர் ராஜ்குமாரின் மகள் .செல்வி சேத்தனா முகப்பேர் டிஏவி பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மணிப்பூர் மாநில பெண்கள் அதிக அதிகாரம் படைத்தவர்களாக திகழ்வது குறித்து புத்தகம் எழுதி வெளியிட்ட “My Trip to Imphal” என்ற புத்தகத்தின் விற்பனை மூலம் கிடைத்த வருவாயை கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் நடனக் கலைஞராகவும் தற்காப்பு கலையான சிலம்பத்திலும் திறன்மிக்கவராக திகழ்ந்து வருகிறார். பள்ளிப் பருவத்திலேயே வடகிழக்கு நகரத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை விவரிக்கின்ற “எனது இம்பால் பயணம்” என்ற பயண புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளார். இதனால் இளம் எழுத்தாளராகவும் திகழ்கிறார். அத்துடன் குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் காப்பகம் போன்றவற்றுக்கு தொண்டு செய்வதுடன் நிதியுதவியும் செய்து வருகிறார்.
இவர் வாய்ப்புற்று நோய் விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்ததோடு, பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக பல்வேறு தருணங்களில் குரல் எழுப்பியுள்ளார். உடல் மற்றும் மனரீதியான வன்கொடுமைகளிலிருந்து தற்காக்கும் கலையை பள்ளிக் குழந்தைகள் கற்பிக்கும் தூதுவராக வேண்டும் என்பதே இவரது எதிர்கால நோக்கமாக உள்ளது. குழந்தைகள் மற்றும் நலிவுற்ற மக்களுக்காக இவரது தொடர்ச்சியான பங்களிப்பை அங்கீகரிக்கும் விதத்தில், மற்ற பெண் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். இதனால் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு இவருக்கு பெண் குழந்தைக்ள முன்னேற்றத்திற்கான பெருமைக்குரிய மாநில விருது, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுப் பத்திரம் தமிழக அரசு வழங்கியுள்ளது. தலைமைச் செயலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், செல்வி சேத்தனாவுக்கு விருதும், பாராட்டு பத்திரமும் வழங்கி கௌரவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க பல்கலைக் கழகம் சார்பில் சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழாவில் குளோபல் அச்சீவர்ஸ் விருது குழுவினர் மாணவி சேத்தனாவின் திறமைகளை கண்டறிந்து, மின்னும் நட்சத்திரம் எனும் விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.
இந்தவிழாவில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செல்வி சேத்தனாவுக்கு மின்னும் நட்சத்திரம் என்னும் விருதினையும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து செல்வி சேத்தனாவுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறதாம்.
இளம் வயதில் பல்வேறு சாதனைகள் புரிந்த செல்வி சேத்தனாவின் தந்தை அயனாவரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு தலைமை மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது தாத்தா சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
– சூரிகா