கலைஞர் பிறந்த நாள் விழாவில் ஆயிரம் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தமிழினத் தலைவர் டாக்டர் மு. கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு உடுமலைப்பேட்டையில் ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, மாளிகை பொருட்களை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் திமுகவினர் வழங்கினர்.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கை அமுல்படுத்தியுள்ள நிலையில், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. இந்நிலையில் திமுகவின் முன்னாள் தலைவர் கலைஞரின் பிறந்த நாளன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். தமிழகம் முழுவதும் கலைஞரின் பிறந்த நாளையொட்டி திமுகவினர் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் தலைமை தாங்கி ஆயிரம் பயனாளிகளுக்கு அரிசி, காய்கறிகளை வழங்கினார். திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன்,திருப்பூர் வடக்கு மாவட்ட பொருப்பாளர் இல பத்மநாபன், உடுமலைப்பேட்டை திமுக நகர் கழக செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கலைஞரின் பிறந்த நாள் விழாவை சிறப்பித்தனர்.