கராத்தே கலைக்கு களங்கம்! கயவர்களை கைது செய்யுமா ? தமிழக அரசு
கராத்தே கலைக்கு களங்கம்! களை எடுக்க வேண்டிய கறுப்பாடுகள்!!
தற்காப்பு கலையின் அடையாளமாக விளங்கும் கராத்தே கலை, உலகின் அனைத்து நாடுகளிலும் பயிற்றுவிக்கப்பட்டுவருகிறது. “கராத்தே என்பது வெறும் கைகளால் தற்காத்துகொள்ளும் முறை” . அனுபவம் வாய்ந்த பழமையான கலையான கராத்தே தற்காப்பு கலையை பயிற்றுவிற்ப்பவர்கள் பெறும்பாலும் பல ஆண்டுக்ள் கடினமாக பயிற்சி எடுத்து பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு அனுபவம் பெற்று தற்காப்பு நுணுக்கங்களை முழுமையாக கற்று தேர்ந்த பின்பு தான் வகுப்புக்கள் எடுக்க அனுமதிக்கப்பட்டு வந்தனர். மேலும் பயிற்சியளர்களாக நியமிக்கபடுபவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பது வழக்கம்.
1980 ஆம் ஆண்டுகளில் கராத்தே கலை இந்தியாவில் மக்களிடையே வெகு பிரபலம் அடைந்தது. அதன்பிறகு பல்வேறு சங்கங்கள் துவக்கி கராத்தேவை விளையாட்டாக மாற்றி பல்வேறு விதிமுறைகளை வகுத்தனர். விதிமுறைகள் அனைத்தும் போட்டிகளில் கலந்துகொள்ளும் போட்டியாளர்க்ளுக்காக உறுவாக்கப்பட்டது. இந்த நிலையில் தான் ஆரம்பமானது சங்கங்களுக்கான தலைமை பதவி போட்டிகள்.மேலும் மதத்திய மாநில அரசுகளிடம் இருந்து காராத்தே மேம்பாட்டிற்காக அதிக அளவில் நிதியும் ஒதுக்கப்படுகிறது.
மாவட்ட, மாநில, அகில இந்திய அளவில் போட்டிகள் நடத்தி தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் ஆசிய அளவிலும் உலக அளவில் நடத்தப்படும் போட்டிகளில் கல்ந்துகொள்ள தகுதி அடைகிறார்கள். இதனால் பல தனியார் பள்ளிகள் அதிக அளவில் தங்களது பள்ளி மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு தங்களது பள்ளியின் பெயர் செய்தி தாளிலும், ஊடகங்களிலும் செய்தி வெளியிட்டு விளம்பரம் படுத்தி தங்களது பள்ளிகளை முன்னிலை படுத்துவதில் முனைப்பு காட்டுகின்றனர். ஆனால் போட்டிகளுக்கு சென்று திரும்பும் மாணவர்களுடன் பெயரளவில் ஒரு பள்ளி ஆசிரியரை மட்டுமே அனுமதிக்கின்றனர்.
இதன் காரணமாகத்தான் கெபிராஜ் போன்ற காராத்தே கறுப்பாடுகள் மாணவிகளிடம் அத்துமீற வாய்ப்பாக அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் கராத்தே சங்கங்கள் குறிப்பிட்ட சிலரின் கட்டுப்பாட்டில் இருந்ததால் விளையாட்டு சுதந்திரம் இல்லாமல் போனது. மேலும் கராத்தே பயிற்சியாளர்களுக்கு நடுவர்களாக பணிபுரிய ஆயிரக்கணக்கில் பணம் கட்டித்தான் தேர்வாக முடியும் என்கிற சூழ்நிலை இருந்ததாகவும் கராத்தே ஆசிரியர்கள் ஆதங்கப்படுகின்றனர். மேலும் சங்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே பள்ளிகளில் வகுப்பு எடுக்க முடியும் என எழுதப்படாத சட்டம் உள்ளது.
உச்சகட்டமாக கராத்தே சங்கங்களின் பெயரில் போலியாக ஆவணங்கள் தயாரித்து மத்திய அரசின் விளையாட்டு மேம்பாட்டுஆணையத்தில் ஓப்புதல் பெற்றிருப்பதாக தமிழகத்தை சேர்ந்த கராத்தே சங்கத்தின் தலைவர் தியாகராஜன் மீதும், தில்லியை சேர்ந்த பொதுச்செயலாளர் பரத் சர்மா மற்றும் மும்பையை சேர்ந்த விரஃப் வச்சா ஆகிய மூன்று பேர் மீதும் மும்பை போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு பரத் சர்மா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் கராத்தே பயிற்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இராணுவம், காவல் துறை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு துறைகளுக்கு கராத்தே பயிற்சி அளிப்பவர்கள் குறித்து இனி வரும் காலங்களில் தீர விசாரணை மேற்கொண்டு பயிற்சி அளிக்க அனுமதிக்க வேண்டும்.
மேலும் பள்ளி மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்களுக்கு குறைந்த பட்சம் கல்லூரி படிப்பை முடித்தவரா? அல்லது வழக்குகள் இருக்கிறதா என தீர விசாரணை மேற்கொள்வதோடு மட்டுமின்றி பயிற்சியின் போது தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மேலும் உயிர்காக்கும் கலையை கற்றுகொடுக்கும் பயிற்சியாளர்கள் நடுவர்களாக போட்டிகளில் பணியாற்றும் போது போட்டியாளர்ககுக்கு காயம் ஏற்படும் போது எந்த ஒரு முதலுதவி அளிக்கும் பயிற்சியையும் பெற்றிருப்பதில்லை. இதனால் பல போட்டியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கராத்தே ஆசிரியர் கெபிராஜ் மீது உள்ள வழக்கை தற்போது தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இவர் தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும் அதிர்ச்சி தகவல் வெளிவர வாய்ப்புள்ளது.
மேலும் கோவையில் ஒரு கராத்தே பயிற்சியாளர் அரசுத்துறையில் உயர் பொறுப்பில் இருந்துகொண்டு கராத்தே சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகிப்பதோடு அரசிடம் எந்த அனுமதியும் பெறாமல் பல்வேறு நாடுகளுக்கு பல முறை சென்று வந்ததாக கூறப்படுகிறது. எனவே இது போன்று குற்றச்சாட்டுகளை தமிழக அரசு தனிப்படை அமைத்து மாவட்டம் தோறும் தீவிர விசாரணை மேற்கொண்டு கண்காணித்து மாணவர்களின் எதிர்காலத்தை காப்பாற்றுவதோடு தற்காப்பு கலைக்கு பாதுகாப்பு வழங்கி களங்கத்தை போக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.