கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்திய கோடங்கிபாளையம் ஊராட்சி தலைவர்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது கோடங்கிபாளையம் ஊராட்சி. இப்பகுதியில் விசைத்தறி மற்றும் கல்குவாரியில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் வசித்துவருகின்றனர். மேலும் ஊராட்சிக்குட்பட்ட 9 வார்டுகளில் ஊராட்சி தலைவர் கா.வி.பழனிச்சாமி தலைமையில் பல்வேறு தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் கோடங்கிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அமைந்துள்ள பகுதிகளில் கொரானா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் 500 நபர்களுக்கு ஒரு பள்ளி ஆசிரியரை நியமித்து வீடு வீடாக சென்று அங்குள்ளவர்களிடம் சுய விபரங்கள் மற்றும் காய்ச்சல் அறிகுறி, சளி மற்றும் இருமல்,சர்க்கரை நோய், இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை காலை 8 மணி முதல் 11 மணி வரை சேகரித்து அவற்றை மதியம் 2 மணிக்குள் வட்டார அலுவலகத்தில் சமபிக்கவேண்டும், இந்த தகவல்கள் அடிப்படையில் சுகாதார துறையினருக்கு அளிக்கப்பட்டு பின்னர் தடுப்பு நடடிக்கைக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் கோடங்கிபாளையம் மற்றும் காரணம்பேட்டை அரசுப்பள்ளிகளில் 60 படுக்கைகள் கொண்ட கொரானா தடுப்பு கண்காணிப்பு மையங்கள் ஊராட்சி சார்பில் தனியார் பங்களிப்போடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோடங்கிபாளையத்தில் ஆட்சியர் உத்தரவின் பேரில் நோய் தொற்று தடுப்பு குழு ஊராட்சி தலைவர் கா.வி.பழனிச்சாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் கிராம நிர்வாக குழு அலுவலர், ஊராட்சி செயலர், கிராம செவிலியர் மற்றும் காவல் அலுவலர் இடம் பெற்றுள்ளனர். மேலும் கோடங்கிபாளையம் ஊராட்சி நிர்வாகத்தில் தீவிர கொரானா தடுப்பு நடவடிக்கையால் கொரானா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 நபர்களாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.