பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்க உத்தரவு
பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை அதாவது பருவ இதழ்களுக்கு தலா மூன்று பேருக்கு அரசு அடையாள அட்டை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிதாக விண்ணப்பித்த பத்திரிகைகளுக்கு அரசு அடையாள அட்டை வழங்கப்படவில்லை. ஏற்கனவே வழங்கப்பட்ட அடையாள அட்டையை மட்டும் புதுப்பித்து வழங்கினர். இதனால் பெரும்பாலான பத்திரிகையாளர்கள் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என மன வேதனையில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர் அடையாள அட்டை வேண்டி விண்ணப்பித்து கிடைக்கப் பெறாத பத்திகையாளர்கள் இன்று தலைமைச்செயலகத்தில் செய்தித்துறை இயக்குநர் பாஸ்கர பாண்டியனைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். பத்திரிகையாளர்களின் கோரிக்கையை கனிவுடன் கேட்ட செய்தித்துறை இயக்குனர் உடனடியாக மக்கள் தொடர்பு அலுவலரை தொடர்பு கொண்டு அரசு அடையாள அட்டை வேண்டி ( PRESS PASS ) முறைப்படி பத்திரிகை வெளியிட்டு விண்ணப்பித்துள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் உடனடியாக அடையாள அட்டை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அரசு அடையாள அட்டை கிடைக்கப் பெறாத இருபதுக்கும் மேற்பட்ட பத்திரிகை ஆசிரியர்கள் இன்று தலைமைச்செயலகத்தில் ஒன்றினைத்து செய்தித்துறை இயக்குநர், செய்தித்துறை துணை இயக்குநர் சுப்பிரமணியன், மக்கள் தொடர்பு அலுவலர் ராகுல் ஆகியோரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்து அதற்கு உடனடியாக தீர்வும் எட்டப்பட்டதால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை கிடைக்க உறுதுணையாக இருந்த தலைமைச்செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் க குமார், நாற்காலி செய்தி ஆசிரியர் மா.கார்த்திகேயன் ஆகிய இருவரிமும் பத்திரிகை ஆசிரியர்கள் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.