தாராபுரம் பகுதியில்… நீண்டநாள் வழிப்பறி திருடர்கள் கைது !

திருப்பூர் மாவட்டம், தாராபுரம், கணியூர், மூலனூர் பகுதிகளில் சமீப காலமாக வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வந்தது. இந்நிலையில் குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், தாராபுரம் துணை மேற்பார்வையில், மூலனூர் காவல் ஆய்வாளர் தலைமையில், தனிப்படை அமைத்து குற்றவாளிகளிகளை தேடி வந்துள்ளனர்.

அப்போது நூற்றுக்கும் மேலான கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், மடத்துக்குளம் அடுத்துள்ள உடையார் பாளையம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் மனோஜ், மூலனூர் எலுகாம்வலசு பகுதியைச் சேர்ந்த சிவஞானம் மகன் சவுரிஸ் ஆகிய இருவரும் தொடர் வழிப்பறி திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. பின்னர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் திருட்டு சம்பவங்களுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம், செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளனர். ஏற்கனவே இவர்கள் இருவர் மீதும் கணியூர், தாராபுரம், மூலனூர் காவல் நிலையங்களில் ஒன்பது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.




