நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பும் அரசு மருத்துமனை பணியாளர்கள்
காய்ச்சல் சிகிச்சைக்கு பரமக்குடி அரசு மருத்துவமனையில் அக்டோபர் 23 அன்று அதிக அளவில் நோயாளிகள் குவிந்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தாலுகா அரசு தலைமை மருத்துவமனையில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் சிகிச்சைக்கு வருவது வழக்கம் இந்நிலையில் அன்று காலை வழக்கத்தை விட கூடுதலாக நோயாளிகளாக சிகிச்சை பெற பொதுமக்கள் வந்தனர்.
இந்நிலையில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் இப்பகுதியில் தீவீரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் பரமக்குடி அரசு மருத்துவமனையில் ஒரு சில பணியாளர்கள் சிகிச்சை பெற வரும் பயனாளிகளிடம் ‘தனியார்ட்ட போக வேண்டியது தானே’ என்ற ஏளனப் போக்கில் நோய் பாதிக்கப்பட்ட நிலையில், கவலையும் வேதனையடைந்து, சிகிச்சை பெற வரும் பயனாளிகளிடம் அணுகுமுறையில் பரிவும் இல்லை, கனிவான பேச்சும் இல்லை, ஒருமை சொற்களில் பேசுவதிலும் குறைவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனை மாற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்தாகவும் உள்ளது.