சினிமாதமிழகம்

சினிமா ஆசையால் சீரழிந்த வாழ்க்கை! : ஏழ்மை காரணமாக உதவி இயக்குநரை மணந்த பெண்!

சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் கடந்த ஜனவரி 21 ஆம் தேதி ஒரு பெண்ணின் கை மற்றும் கால்கள் தனித்தனியாக வெட்டப்பட்டு கிடந்ததைப் பார்த்த மாகராட்சி ஊழியர்கள் இது குறித்து பள்ளிக்கரணை போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் துண்டு துண்டாக உடல் பாகங்கள் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடியை சேர்ந்த சந்தியா என்பதும் அவர் திரைப்பட இயக்குநர் பாலகிருஷ்ணன் மனைவி என்பதும், இவர்கள் இருவரும் ஜாபர்கான்பேட்டையில் வசித்து வந்தார்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் அவரது கணவர் பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தியதில் சந்தியாவைக் கொன்றதை ஒப்புக் கொண்டார். மனைவி மீது கொண்ட சந்தேகத்தால் அவரை வெட்டி கொன்றதாகவும், உடல் பாகங்களை குப்பையில் வீசியதாகவும் வாக்குமூலம் அளித்தார்.
இதைத் தொடர்ந்து சென்னை காசி தியேட்டர் அருகே உள்ள கூவம் ஆற்றில் சந்தியாவின் இடுப்பு, மற்றும் தொடைப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டது.

பாலகிருஷ்ணன் அளித்துள்ள வாக்குமூலத்தில்; சிறு வயதில் இருந்தே சினிமா துறையில் ஆசை இருந்ததால் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்துள்ளார். இயக்குநர் ஒருவரிடம் உதவி இயக்குநராக பணியில் சேர்ந்துள்ளார்.
அடுத்த சில வருடங்களில் குறைந்த பட்ஜெட் படங்களுக்கு பைனான்ஸ் செய்து வந்துள்ளார். அப்போது கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியிலிருந்து சந்தியா என்பவர் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தபோது தயாரிப்பாளராக இருந்த பாலகிருஷ்ணனை சந்தித்தார். சந்தியாவின் அழகில் மயங்கிய பாலகிருஷ்ணன் அவருக்கு சில படங்களில் துணை நடிகையாக நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்ததால், சந்தியாவுக்கும் பாலகிருஷ்ணன் மீது காதல் ஏற்பட்டது. ஆனால், அதை அவர் வெளிப்படுத்தவில்லை. அடிக்கடி போனில் மட்டும் பேசி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் பாலகிருஷ்ணன் தனது காதலை சந்தியாவிடம் தெரிவித்துள்ளார். அதை சந்தியாவும் ஏற்றுக்கொண்டார். பிறகு இருவரும் இரு வீட்டு சம்மதத்துடன் 15 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மாயவர்மன் என்ற மகனும் யோகயாத்ரா என்ற மகளும் உள்ளனர். சந்தியாவுக்கும் திரைத்துறையில் பெரிய நடிகையாக வரவேண்டும் என்று ஆசை. ஆனால், கல்யாணத்திற்கு பின் படங்களிலும் நடிக்க கூடாது என்று பாலகிருஷ்ணன் தடை போட்டதால், சந்தியாவுக்கு கணவர் மீது வருத்தம் இருந்தது.
இதனைத் தொடர்ந்து சந்தியா கிரியேஷன் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி “காதல் இலவசம்” என்ற படத்தை சொந்தமாக தயாரித்து வெளியிட்டார். ஆனால் அந்த படம் ஓடாததால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அதன் பிறகு, சொந்த ஊரில் உள்ள சில இடங்களை விற்று அந்த பணத்தை வைத்து சின்ன பட்ஜெட் படங்களுக்கு பைனான்ஸ் செய்து வந்துள்ளார். இதனால், பாலகிருஷ்ணன் வீட்டிற்கு சினிமா இயக்குநர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வந்து செல்வது வழக்கம்.
இதற்கிடையே, வீட்டிற்கு வந்து செல்லும் தொழிலதிபர் ஒருவருடன் சந்தியாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. பாலகிருஷ்ணன் பாமகவில் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்ததால் அடிக்கடி தூத்துக்குடிக்கு சென்று வந்தார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சந்தியா தொழிலதிபரான தனது கள்ளக் காதலனை வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். இந்த கள்ளக் காதல் மேட்டர் தெரியவந்ததால். சந்தியாவிடம் கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த தொழிலதிபர் பேச்சைக் கேட்டு சந்தியா என்னிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சந்தியா மீது அளவில்லா காதலால் எனக்கும் விருப்பமில்லை. ஆனாலும் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரினார். இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், என்னை விட்டு பிரிந்து சொந்த ஊருக்கு சென்ற அவர், சில வாரங்களுக்குப் பின் சந்தியா சினிமாவில் நடிக்க முடிவு செய்து சென்னைக்கு வந்த அவருக்கு கள்ளக்காதலன் துணையுடன் வாய்ப்பு தேடி வந்துள்ளார். அப்போது, என்னை வெறுப்பேற்றும் விதமாக நான் பார்க்கும் வகையில் அவர் கள்ளக்காதலனுடன் ஜோடியாக ஷாப்பிங், சினிமா என ஜாலியாக சுற்றினார்.
இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான நான் சந்தியா திருந்தி வாழ வில்லை என்றால் கொலை செய்து விடலாம் என்று திட்டமிட்டு கறிக் கடையில் இருக்கும் அதாவது மாடு வெட்டும் கத்தியை வாங்கி தயாராக வீட்டில் வைத்திருந்தேன், சந்தியாவை கடந்த 19ம் தேதி இரவு வீட்டிற்கு பேச வரச்சொன்னேன். அவரும் வந்தார் அப்போது, குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாம் மீண்டும் இருவரும் சேர்ந்து வாழலாம் என்று கூறினேன். அதற்கு சந்தியா, ‘நான் இனி கள்ளக்காதலனுடன்தான் வாழ்வேன். உனக்கும் எனக்கும் இனி எந்த தொடர்பும் இல்லை.நான் உன்னுடன் வாழ மாட்டேன்’என சொல்லி விட்டு, வீட்டை விட்டு வெளியேற முயன்றதால் சந்தியாவை படுக்கை அறைக்கு இழுத்துச் சென்றேன். சந்தியாவின் வாயை ஒரு கையால் பொத்திக்கொண்டு இன்னொரு கையால் கத்தியை வைத்து அவரது கழுத்தை அறுத்து தலையை வெட்டி எடுத்தேன். அடுத்ததாக உள்ளாடையை தவிர மற்ற ஆடைகளை கழற்றி விட்டு இரண்டு கைகள், இரண்டு கால்களை துண்டு துண்டாக வெட்டி எடுத்தேன்.
அடுத்ததாக, இடுப்பு பகுதியை கத்தியால் வெட்டி எடுத்தேன். மொத்தம் 7 பாகங்களாக உடலை பிரித்து எடுத்து. அரிசி சாக்கு எடுத்து 2 கால்கள், 1 கைகள் ஒரு பார்சலாகவும், இன்னொரு பார்சலில் தலை மற்றும் இடது கை, மார்பு பகுதி ஒரு பார்சலாகவும், தொடையில் இருந்து இடுப்பு வரை உள்ள பாகம் ஒரு பார்சலாகவும் பெரிய பிளாஸ்டிக் பைகளில் அடைத்து 4 பார்சலாக அடைத்து 20ம் தேதி அதிகாலையில் இரண்டு பார்சல்களை காசி தியேட்டர் பக்கத்திலுள்ள மேம்பாலத்தின் கீழ் அடையாறு ஆற்றில் வீசிவிட்டேன். மீதம் இருக்கும் இரண்டு பார்சல்களை விநிஸி நகர் பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் வீசி விட்டு வீட்டிற்கு வந்தேன். அதுமட்டுமல்ல சந்தியாவின் செல்போனை உடைத்து தூக்கி போட்டுவிட்டேன் .
உடல் பாகங்களை வீசிவிட்டு நேராக வீட்டிற்கு வந்தேன், வீடு முழுவதும் ரத்த வாடை வந்ததால், டெட்டால், ஆசிட் ஊற்றி 6 முறை வீடு முழுவதும் சுத்தமாக கழுவினேன். கொலை செய்யப்பட்ட எந்த அடையாளமும் இல்லாமல் சினிமா ஸ்டைலில் அனைத்து வேலைகளையும் வெறும் 4 மணி நேரத்தில் பக்காவாக செய்து முடித்தேன். அன்று முதல் யாருக்கும் எதுவும் சந்தேகம் வராத மாதிரி எனது வேலையை செய்து வந்தேன். தொடர்ந்து தினமும் அனைத்து நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளை கவனமாக கண்காணித்து வந்தேன். ஆனால், சந்தியாவின் செல்போன் சிக்னலால் போலீசாரிடம் மாட்டிக் கொண்டேன் என அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.


இதனிடையே சந்தியாவின் தாய் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கடந்த 19-ஆம் தேதி முதல் என்னுடன் சந்தியா பேசவில்லை. இதனால் எனது மாப்பிள்ளை பாலகிருஷ்ணனுக்கு போன் செய்து கேட்டபோது சந்தியா வெளிநாடு சென்றுவிட்டதாக கூறினார், ஆனால் பெருங்குடி குப்பை கிடங்கில் கிடந்த கை, கால்களைப் பார்த்ததுமே தனக்கு சந்தேகம் வந்ததாக கூறினார்.
என் மகள் அழகாக தெரியக்கூடாது என்பதற்காக சந்தியாவுக்கு பல முறை பாலகிருஷ்ணன் மொட்டை அடித்துள்ளார் என்றும், பாலகிருஷ்ணனுக்கு எப்போதுமே என் மகள் மீது சந்தேகம்தான் என சந்தியாவின் தாய் கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலத்தில் வசிக்கும் சந்தியாவின் உறவினர்கள் சிலர் சந்தியா குறித்து சில அதிர்ச்சிகரமான வேதனை மிகுந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
சந்தியா சிறு வயதிலேயே அழகாக இருப்பார். அவருடைய பெற்றோர் ஊரில் சிறிய டீக்கடை நடத்தி வருகின்றனர். எனவே குடும்ப வறுமை காரணமாக 7-ம் வகுப்புடன் சந்தியா படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். அதன்பிறகு சில காலம் வீட்டிலேயே சந்தியா இருந்தார். அப்போது பெண் தரகர் ஒருவர், சினிமாவில் உதவி இயக்குனராக ஒருவர் உள்ளார். அவரது சொந்த ஊர் தூத்துக்குடி, நல்ல வசதியான குடும்பம் என்று கூறி சந்தியாவை பெண் கேட்டு அவருடைய பெற்றோரை அணுகினார். முதலில் மறுப்பு தெரிவித்த சந்தியாவின் பெற்றோர், நாம்தான் கஷ்டப்படுகிறோம், நம்முடைய மகளாவது நன்றாக வாழட்டும் என நினைத்து திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். சந்தியாவை விட பாலகிருஷ்ணனுக்கு 15 வயது அதிகம்..
ஆனாலும் குடும்ப ஏழ்மை கருதி சந்தியா திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். ஆரம்பத்தில் அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாகத்தான் சென்றது. சந்தியா குழந்தைகளுடன் தூத்துக்குடியில் வசித்து வந்தார். சந்தியாவுக்கு மாயவரதன் என்ற மகனும், யோகமுத்ரா என்ற மகளும் உள்ளனர்.
பாலகிருஷ்ணன் மட்டும் சென்னையில் வசித்து வந்தார். அவர் அடிக்கடி தூத்துக்குடி வந்து மனைவி மற்றும் பிள்ளைகளை பார்த்து வந்தார். அவர் சென்னையில் இருந்ததாலும், சந்தியா அனைவரிடமும் சகஜமாக பேசக்கூடியவர் என்பதாலும் சந்தியா மீது அடிக்கடி பாலகிருஷ்ணன் சந்தேகப்பட்டதாக தெரிகிறது.
இதனாலேயே இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. பொறுமையாக இருந்த சந்தியா ஒரு கட்டத்தில் கணவரை பிரிந்து வாழ முடிவு செய்தார். அதற்காக விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு தாக்கலும் செய்துள்ளார்.
ஆனால் நடந்ததை மறந்துவிட்டு சேர்ந்து வாழலாம் என்று சந்தியாவை ஏமாற்றி அழைத்துச் சென்ற பாலகிருஷ்ணன் இப்படி கொடூரமாக சந்தியாவை கொலை செய்து விட்டார். தற்போது அவரது 2 பிள்ளைகளும் அனாதையாகி விட்டனர் என்று தெரிவித்தனர். சந்தியா குறித்து அவர்கள் கூறும்போது, அவர் எல்லோரிடமும் சகஜமாக பழகக் கூடியவர் என்றும், மற்றபடி சந்தியா கன்னியமானவர் என்றும் அந்த உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button