சுதந்திரப் போராட்ட தியாகிகள் புகைப்பட கண்காட்சியில், குவியும் பொதுமக்கள்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மணி மஹாலில் திருமண மண்டபத்தில் 75 வது சுதந்திர தின விழா ” சுதந்திர திருநாள் அமுதம் பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கடந்த மார்ச் 27 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் டாக்டர்.எஸ்.வினீத் தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி. என்.கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர்.
இதனை அடுத்து பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறுகையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 75 வது சுதந்திர தின விழா ” சுதந்திர தின அமுதம் பெருவிழா” சிறப்பாக கொண்டாடப் படுவதாக தெரிவித்தார். மேலும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்த புகைப்பட கண்காட்சியும், அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இக்கண்காட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, சுற்றுலாத் துறை, உணவுப் பாதுகாப்புத்துறை, பள்ளிக்கல்வித்துறை, மகளிர் திட்டம், சுற்றுச்சூழல், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், சமூகநலத்துறை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மாவட்ட முன்னோடி வங்கி, கால்நடை பராமரிப்புத்துறை, வனத்துறை, பட்டுவளர்ச்சித் துறை, போக்குவரத்து ஆகிய துறைகளின் மூலம் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஏழு நாட்கள் பல்வேறு விழிப்புணர்வு கலைநிகழ்சிகள் நடைபெற்றுவரும் நிலையில் பரதநாட்டியம் மற்றும் பாரம்பரிய கலை நிகழ்சிகள் நடைபெற்றுவருகிறது. பொதுமக்கள் இந்த கண்காட்சியை பார்த்து அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை தெரிந்து பயனடைந்துவருகின்றனர். கண்காட்சியின் துவக்க நாளில் மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லட்சுமணன், தனித்துணை ஆட்சியர் அம்பாரிநாதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலத் திருமதி வாசுகி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஸ், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் இல.பத்பநாபன், பல்லடம் நகராட்சி தலைவர் திருமதி. கவிதாமணி ராஜேந்திரன், துணைத்தலைவர் திருமதி. நர்மதா, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திருமதி.தேன்மொழி, துணைத்தலைவர் ஈ.பாலசுப்பிரமணியம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செ.கு.சதீஸ்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி) மா.சதீஸ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தன்ர்.