பழனி சட்டமன்றத் தொகுதி : திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் : செயல்பாடு எப்படி..? ஓர் விரிவான பார்வை
ஒரு அரசியல் கட்சியின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் தான் எம்.ஜி.ஆரும், கலைஞரும். இருவரும் முதல்வர்களாக இருக்கும் பொழுது சாலை வழியாக காரில் செல்லும் போது வயல்வெளிகளில் வேலை செய்யும் விவசாயிகளை அழைத்து குறைகளை கேட்டு அறிவதோடு அவர்களுடன் ஒரு புகைப்படத்தையும் எடுத்துக்கொள்வார்கள். இந்த செயல் விவசாயியை மிகவும் கவர்ந்து விடும். எம்.ஜி.ஆர், கலைஞருக்கு பிறகு இப்படி ஒரு ஆக்டிவான தலைவராக தமிழகத்தில் யாரும் உருவெடுக்கவில்லை. இன்றைக்கு பழனி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஐ.பி.செந்தில்குமார் ஒரு ஏழையின் வீட்டு சுவர் இடிந்த விழுந்தாலும் முதல் ஆளாகச் சென்று அந்தக் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வதோடு உதவியும் செய்வார்.
ஐ.பி.செந்தில்குமார் ஆக்டிவான அரசியல் பற்றி கட்சி சார்பற்ற நடுநிலையான அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம்.தமிழகத்தை பொருத்த வரையில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு 2018 ஆம் ஆண்டு மழை கொட்டித் தீர்த்தது. 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலில் கொடைக்கானல் பகுதி மிகவும் சேதம் அடைந்தது. அந்த நேரத்தில் பழனி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ வான ஐ.பி.செந்தில்குமார் கஜா புயல் நேரத்தில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்து உடனடியாக நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்தார்.
மேலும் மேல்மலை, கீழ் மலைப்பகுதிகளில் கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்தார். மேலும் கொடைக்கானலில் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல்களை அகற்றி ஒரு முறை கட்டிடங்களை வரை முறைப்படுத்த சட்டமன்றத்தில் கோரிக்கையையும் வைத்தார். அதேபோல் கீழ் மலைப்பகுதியான தாண்டிக்குடியில் ரூபாய் 11 லட்சம் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சமுதாய கூடம் ஒன்று அமைத்து கொடுத்துள்ளார். மேலும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் ரத்த சேமிப்பு அறை, இரத்த சேமிப்பு வங்கி மேம்படுத்துவதற்கான நோயாளிகளின் காத்திருப்பு அறை ஆகியவையும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5.75 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டி கொடுத்துள்ளார்.
இதுபோல் பல நலத்திட்டங்களை கொடைக்கானல் பகுதிக்கு செய்து கொடுத்துள்ளார். மேலும் கொரோனா காலகட்டத்திலும் பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சென்று கள ஆய்வு செய்து பொது மக்களின் தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்து அவைகளை நிவர்த்தி செய்து கொடுத்துள்ளார். மேலும் கொடைக்கானல் மலைப்பகுதியில் வெள்ளகவி கிராமத்திற்கு நீண்ட காலமாக சாலை வசதி இல்லாமல் இருந்து வந்தது. அந்த பகுதி மக்கள் பல நாள் கோரிக்கையாக சாலை அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். அந்த கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளகவி மக்களோடு மக்களாக இணைந்து பல முறை போராட்டம் செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். சாலை அமைப்பதற்காக சர்வே செய்யும் பணியும் நடந்து வருகின்றது. மேலும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் ஐ.பி.செந்தில்குமார் பழனி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகின்றார்.
ஐ.பி.செந்தில்குமார் அவ்வளவு எளிதாக சட்டமன்ற உறுப்பினர் பதவியை அடைந்து விடவில்லை. திமுகவில் திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக தனது அரசியல் வாழ்வைத் தொடங்கினார். பின்னர் திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளராக உயர்ந்தார். பின்னர் 2014 ஆண்டு முதல் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றி வருகிறார். 2016 ஆண்டு முதல் பழனி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றார். பழனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எந்த ஒரு கிராமம், நகரப்பகுதியில் இவரது கால் படாத இடமே இல்லை. ஒவ்வொரு கிளைக் கழகமாக சென்று கொடியேற்றி உடன்பிறப்புகளுக்கு உற்சாகத்தை அளித்து வருகிறார். மேலும் பொதுமக்கள், கழக உடன்பிறப்புகள் சுக துக்க நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்வார். வெற்று விளம்பரங்களால் மக்கள் மனதில் இடம் பிடித்து விட முடியாது. மக்களும் தெளிவான முடிவை எடுக்கக் கூடியவர்கள். அப்படிப்பட்டவர்கள் மனதில் தனது எளிமையான அரசியலால் நீங்கா இடம் பிடித்து விட்டார். எந்த கட்சியும் சாராத நடுநிலையான நடுநிலையாளர்கள் ஐ.பி.செந்தில்குமார் அவர்களின் எளிமையைப் பாராட்டி வருகின்றனர்.
மேலும் பொது மக்கள் யாவரும் எளிதில் அணுகக்கூடிய சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவரைப் போன்று மற்ற மக்கள் பிரதிநிதிகளும் பணியாற்ற வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமும்.
– A.முகமது ஆரிப்