மதுரை மாவட்டம் திருமங்கலத்திலுள்ள தியாகி விஸ்வநாததாஸ் 133வது பிறந்தநாளையொட்டி அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு தரப்பினரும் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருமங்கலத்தில் வாழ்ந்து வந்த சுதந்திரப்போராட்ட தியாகி விஸ்வநாததாஸ்.இவர் நாடக நடிகராக இருந்துகொண்டு 1919முதல் தனது மேடைப்பாடல் மூழமாக வெள்ளையர்களுக்கெதிரான பாடல்களைப்பாடி மக்கள் விழிப்புணர்வு பெரும்அளவுக்கு பாடல்மூலமாக ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினார். அதற்காக அவர் 29முறை ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரது பிறந்தநாள் அரசின் விழாவாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தியாகி விஸ்வநாததாஸின் 133 வது பிறந்த நாளையொட்டி திருமங்கலத்தில் அவரது நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவச்சிலைக்கு தமிழக அரசின் சார்பில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், மதுரை மாவட்ட ஆட்சியர் சாந்தக் குமார் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் திருமங்கலம் வட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து திருமங்கலம் நகராட்சியில் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய நகராட்சி அலுவலக கட்டிடத்தை பார்வையிட்டார்.