கணவனின் காதல் லீலை அம்பலம்.. : மனைவியின் மனதை உருக்கும் தற்கொலை வீடியோ…
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். சென்னை ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஷோபனா என்ற பெண்ணுக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்னதாக ஷோபனா வீட்டில் வரதட்சணையாக 50 சவரன் நகை, 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக் மற்றும் சீர்வரிசை பொருட்களை கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் வேலை பார்த்து வந்த விஜயகுமாருக்கு கொரோனா ஊரடங்கின் விளைவாக வேலை பறிபோனதாக கூறப்படுகிறது. அதனால் விருதாச்சலத்துக்கு சென்ற அவர் மனைவி, குழந்தை மற்றும் தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயகுமார் செல்போனுக்கு பெண் ஒருவர் கால் செய்துள்ளார். அப்போது கணவன் தூங்கிக்கொண்டிருந்ததால், ஷோபனா அந்த பெண்ணுடன் பேச்சு கொடுத்துள்ளார்.
அப்போது, ஈரோட்டில் இருந்து பேசுகிறேன் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட அப்பெண், ‘’நானும் விஜயகுமாரும் நீண்ட நாட்களாக காதலித்தது வருகிறோம் என்றும், விஜயகுமாரால் பலமுறை தான் கர்ப்பம் அடைந்து கருவை கலைத்துள்ளதாகவும் கூறியிருக்கிறார். அதனை கேட்ட ஷோபனா, தன்னுடைய கணவரின் துரோகத்தை நினைத்து பேரதிச்சி அடைந்துள்ளார்.
பின்னர் அதுகுறித்து ஷோபனா விளக்கம் கேட்ட போது, மாட்டிகொண்டோமே என்று பதறிய விஜயகுமார், அச்சம்பவத்தை மறைப்பதற்காக ஷோபனாவிடம் வரதட்சணை கேட்டு சண்டையிட்டுள்ளார். மேலும், மகனின் தகாத செயலை கண்டிக்காமல், அவரது தாயும் ஷோபனாவை ஆபாசமாக திட்டி கொடுமைப்படுத்தியுள்ளார்.
தன்னை வெளியே அனுப்பிவிட்டு, ஈரோடு பெண்ணை வீட்டுக்கு அழைத்து வருவதுதான் கணவன் மற்றும் மாமியாரின் நோக்கம் என்பதை கடைசியில் புரிந்துகொண்ட ஷோபனா கடந்த வாரம் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அந்த வீடியோவில், ‘’எப்படியும் என்னை வீட்டை விட்டு வெளியேற்றவே கணவரும், மாமியாரும் என்னை அடித்து கொடுமை படுத்துகின்றனர். நான் இறந்து விட்டால் என் குழந்தையை காப்பாத்துங்க. என்னுடைய அப்பாவை புதைத்த இடத்திலேய என்னையும் அடக்கம் செய்யுங்க’’ என்று கதறி அழுது பேசும் நிகழ்வு கண்ணீரை வரவைத்துள்ளது. ஷோபனா தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, விருத்தாச்சலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மனிதனாக பிறக்கும் யாவரும் சந்தோசத்தை மட்டுமே எதிர்பார்க்காமல், போராட்ட காலங்களில் எதிர் நீச்சல் போட்டு கடந்து வருவதுதான் நியதி. அதற்காக தற்கொலை செய்துகொள்ளும் முடிவை எடுக்காமல், தைரியமாக புகார் கொடுத்து குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுவதுதான் சரியாக இருக்கும்.
- நமது நிருபர்