தமிழகம்

கட்டுப்படாத மக்கள்.. கண்டிக்கும் காவல்துறை…

கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தாலும் சென்னையின் பல்வேறு இடங்களில் அவசியமின்றி அலட்சியமாக சிலர் சுற்றி வருகின்றனர். அவர்களை கட்டுக்குள் வைக்க போலீசாரும் போராடி வருகின்றனர்.

மக்கள் அவசியமின்றி நடமாடுவதை கட்டுப்படுத்த வாகனங்களில் வருவோரை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ராயப்பேட்டை நடேசன் சாலை – அவ்வை சண்முகம் சாலை சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவலர்கள் அவசியம் இன்றி சுற்றி திரிந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

காவல்துறையினர் அனைத்து மூலைமுடிக்கிலும் தணிக்கையில் ஈடுபட்டு வருவதால் வெளியே ஊர் சுற்ற முடியாத பலர் தங்களது சைக்கிள்களிலும், நடந்தபடியும் தெருக்களில் உலா வந்தனர்.

இரவு பகல் பாராது மருத்துவத்துறை, உள்ளாட்சி துறை, காவல்துறை என அரசின் பல துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து கொரோன தடுப்பு நடவடிக்கையை துரித படுத்தி வருகின்றனர். ஆனால் மக்கள் அலட்சியமாக அவசியமற்ற காரணங்களுக்காக ஊர் சுற்றி வருவது அவர்களுக்கு மட்டுமின்றி சமுகத்திற்கே தீங்கு விளைவிக்கும் என்பதினை மக்கள் உணர வேண்டும் என்பதே முன்னின்றி களப்பணியாற்றும் ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button