வாகன சோதனை என்று வசூலில் ஈடுபட்ட போலி போலீஸ்… : கொரோனா இருப்பதாக கூறி காவல்நிலையத்தில் நாடகம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுக்கா கண்டை எரம்மலம்பட்டியை சேர்ந்த அல்வா பீட்டர் ராமன் என்பவன் 2 ஆம் வகுப்பைக்கூட தாண்டத நிலையில் பிரெண்ட்ஸ் அஃப் போலீஸ் நண்பர்களோடும் சில அரசியல் கட்சி நிர்வாகிகளுடனும் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக தன்னை SI-யின் டிரைவர் என்றும், சார்பு ஆய்வாளர் என்று கூறி வாகன சோதனையிலும், பெட்டிக்கடை உரிமையாளர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் பெரிய ஆலங்குளத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவர் கொத்தனாராக இருந்து வருகிறார். வேல்முருகன் மற்றும் அவரது மனைவியும் இருசக்கர வாகனத்தில் கடந்த வாரம் பெரிய ஆலங்குளத்திற்க்கு சென்றபோது அவர்களை வழிமறித்து வாகன சோதனை செய்வது போன்று நாடகமாடி 4,500 ரூ பெற்று அனுப்பி வைத்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த வேல்முருகன் தம்பதியர் பெருங்குடி காவல்நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்தனர். வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டத்தில் அவன் மீது ஏற்கனவே திருமங்கலம் பகுதியில் இரவு ரோந்து பணியில் போலீஸ் உடையுடன் வசூல் செய்த போது கடந்த ஆண்டு திருமங்கலம் நகர் காவல்நிலையத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல் பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் பெருங்குடி காவல் எல்லைக்குட்பட்ட பெட்டிக்கடையில் தன்னை SI என்று கூறி பணம் கேட்டு மிரட்டியத்தை அடுத்து கடைக்காரர் பெருங்குடி போலீசாருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார் பீட்டர் ராமனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
தொடர்ந்து காவல் நிலையத்தில் டூப்பு அல்வா பீட்டர் ராமன் தனக்கு கொரோனா இருப்பதாக கூறி நாடகமாடினான். மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பரிசோதனை முடிவுகளுக்கு பின்னர் சிறையில் அடைக்கபட உள்ளான்.
தற்போது குற்றவாளி கூட தன்னை காப்பாற்றிகொள்ள கொரானா சம்பவத்தை பயன்படுத்தி தப்பிக்க முயன்றது வேடிக்கையாக உள்ளது.
- நீதிராஜன்