தமிழகம்

விசாரிக்க தனிவீடு… பணம் கேட்டு மடக்கப்படும் லாரிகள்… : தொடரும் பட்டாளம் இன்ஸ்பெக்டரின் கட்டப் பஞ்சாயத்து!

விசாரணை என்ற பெயரில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட சாத்தான்குளம் வியாபாரிகள் கொடூர மரண வழக்கு நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு 4 பேர் கைதாகி உள்ளனர்.
இந்த சூழலில் இதே போல வியாபாரிகளிடமும், அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் லாரிகளை மடக்கியும் தொடர் வசூலில் ஈடுபடும் இன்ஸ்பெக்டரால் பொதுமக்கள் பெரிதும் அவதி படுகிறார்கள்.

இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம்


அதோடு, புகார் கொடுக்கும் பொது மக்களை அலட்சியமாகவும், புகாரில் குற்றம் சாட்டப்படும் நபரிடம் கட்டப்பஞ்சாயத்து செய்தும் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகிறார் இந்த இன்ஸ்பெக்டர்
தனது கட்டப்பஞ்சாயத்து வசூல் வேட்டைகளுக்கு வசதியாக ஊருக்கு ஓரமாக ஒரு வீட்டையும் வாடகைக்கு பிடித்து வைத்து இருக்கிறார். சென்னையின் நுழைவு பகுதியான செங்கல்பட்டு நெடுஞ்சாலையை ஒட்டிய படாளம் போலீஸ் நிலையம் என்பதால் இந்த கொரானா சூழலிலும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் ஏதோ ஒரு காரணம் சொல்லப்பட்டு மடக்கி நிறுத்தப்படும். கேட்கிறதை கொடுத்தால் லாரி விடுவிக்கப்படும். எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் காரணம் இல்லாமல் அடித்து உதைக்கப்படுவார்.


வாகன சோதனை என்ற பெயரில் தினமும் பெரிய தொகைக்கு கல்லா கட்டுகிறாராம் இந்த இன்ஸ்பெக்டர். இவ்வளவு இம்சைகள் கொடுக்கிற போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் இப்போது செங்கல்பட்டு மாவட்டம் படாளம் போலீஸ் ஸ்டேஷனில் பணியில் இருக்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் கொடுக்கும் புகார்கள் மீதும் சரியான விசாரணை செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவி வருகிறது. இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கும் பட்சத்தில் உடனடியாக உயர் அதிகாரிகள் விசாரணை செய்து சரி செய்ய வேண்டியது மிக மிக அவசியம்.


இதுபோன்ற அத்துமீறல் இன்னொரு சாத்தான்குளம் சம்பவம் போல ஆகாமல் தடுக்க வேண்டியது அரசின் கடமை!


கோடங்கி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button