5ஆம் கட்ட ஊரடங்கு நீடிப்பு : தமிழக அரசின் தளர்வுகள் வெளியீடு
நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேநேரம், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 5- வது கட்டமாக, ஜூன் 30 ம் தேதி நள்ளிரவு வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள சூழலில், சென்னை காவல் எல்லையை தவிர்த்து, பிற பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ள முக்கிய தளர்வுகள் குறித்த முழு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
இதன்படி வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா ஸ்தலங்கள், தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட்டுகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் இயங்காது.
சர்வதேச விமான போக்குவரத் திற்கான தடை நீடிக்கும் – மெட்ரோ ரயில். மின்சார ரயில்கள் இயங்காது – திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக் கைக் கூடங்கள், பார்கள், பெரிய அரங்கு கள், கூட்ட அரங்குகள், உயிரியல் பூங்காக்கள்,அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
ஊர்வலம், பொதுக் கூட்டம், அரசியல் மற்றும் மத நிகழ்ச்சிகளுக்கு தடை நீடிப்பு. இறுதி ஊர்வலம் மற்றும் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் 20 நபர் களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது. திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்ற நடைமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படும். எனினும், 20 விழுக் காடு பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.
அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல் பட அனுமதிக்கப்படுகிறது. வணிக வளாகங் கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் நகை, ஜவுளி உள்ளிட்ட பெரிய கடைகள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம்.
டீ கடைகள், உணவு விடுதிகள் மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்து வைத்திருக்கலாம்.
டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம். வருகிற 8 ம் தேதிக்குப்பின், டீ கடை மற்றும் உணவகங்களில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டு உள்ளது.
அத்தியாவசிய மற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் வழங்க அனுமதிக் கப்படுகிறது. வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து 3 பயணி களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
ஆட்டோக்கள் 2 பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படும், சைக்கிள் ரிக்ஷா இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வெளியில் செல்லும் போதும், பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம். வீட்டிலும், அலுவலகத்திலும் கட்டாயம் அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும்.
வெளியிடங்களில் சமூக இடை வெளியை கடை பிடித்து, கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.