கொரோனா பரவாமல் தடுப்பு உபகரணங்கள் வாங்க 50 லட்சம் நிதி ஒதுக்கிய எம்.பி.,
,
கொரானா நோய் தொற்று முன்னெச்சரிக்கைதடுப்பு, சிகிச்சை பணிகளுக்கான உபகரணங்கள் வாங்க, மாவட்ட நிர்வாக தேவைக்கேற்ப நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 50 லட்சம் வரை ஒதுக்கீடு செய்வதாக ராமநாதபுரம் எம்.பி., கா.நவாஸ் கனி அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ள கொரானா நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க உலகம் முழுவதும் பல கட்டங்களாக பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக என்னை பிரதிநிதியாக தேர்ந்தெடுத்த என்னுடைய இராமநாதபுரம் தொகுதி மக்களின் நலனை பாதுகாப்பது என்னுடைய தலையாய கடமையாக உணர்கிறேன். அதற்காக இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 50 லட்சம் வரை கொரினா நோய் தொற்று முன்னெச்சரிக்கைதடுப்பு, சிகிச்சை பணிகளுக்கான உபகரணங்கள் வாங்க, மாவட்ட நிர்வாக தேவைக்கேற்ப ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளேன்.
இந்தப் பெரும் அச்சத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினராக மாவட்ட நிர்வாகத்திற்கு அனைத்து ஒத்துழைப்பையும் தர தயாராக உள்ளேன். இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் பாதிப்பு பெருமளவில் இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கையுடன் மக்கள் நடந்து கொள்ள வேண்டும். முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அனைத்து விதமான உதவிகளையும் அரசு செய்து வருகிறது. இந்த நோய் முற்றிலுமாக அகற்றப்படும் வரை அனைவரும் இணைந்து போராடுவோம்.
இந்தப் பேரிடரில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள மக்கள் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும், பொது மக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தரர்.
அ.நூருல்அமீன்