பத்திரிகையாளர்களை கேவலமாக பேசிய நடிகை குஷ்பூ…!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருவதை அடுத்து அனைத்து துறைகளும் கடந்த மூன்று மாதங்களாக செயல் படாமல் முடக்கப் பட்டது. இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி சில தளர்வுகளை அறிவித்து உத்தரவிட்டது தமிழக அரசு .
இந்நிலையில் சினிமா படப்பிடிப்பில் சின்னத்திரை படப்பிடிப்புகள் மட்டும் அறுபது நபர்களை மட்டும் வைத்து நடத்திக் கொள்ள அனுமதி வழங்கியது.
அதாவது சின்னத்திரையை நம்பி ஏராளமானோர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மட்டுமே அரசு படப்பிடிப்பை நடத்த அனுமதி வழங்கியது.குஷ்பு போன்ற செல்வந்தர்கள் சம்பாதிப்பதற்கு அல்ல.
ஆனாலும் கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்றி அரசின் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு படப்பிடிப்புகள் நடத்த வேண்டும் என்று அனுமதி வழங்கியது.
இந்நிலையில் சின்னத்திரை சங்கத்தில் பொறுப்பில் இருக்கும் நடிகை குஷ்பூ சின்னத்திரை வாட்ஸ்அப் குழுவில் படப்பிடிப்புகள் நடத்தும் நபர்களுக்கு எச்சரிக்கை விடுத்து ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்க கூடாது. அவனுங்க வேலை இல்லாமல் இருக்கானுங்க என்று கேவலமாக பேசி இருக்கிறார் .
குஷ்புவுக்கு வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்வது இது ஒன்றும் புதிது அல்ல. பல முறை பேசியிருக்கிறார். ஆனால் இந்த முறை குஷ்பூ பேசியது ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகையாளர்களை பேசியிருக்கிறார் . இதுகுறித்து பத்திரிகையாளர் களின் சுயமரியாதையை இழிவாக பேசிய குஷ்புவுக்கு கண்டன குரல்கள் வலுத்து வருகிறது.
படப்பிடிப்பு வெளிப்படையாக அரசு விதித்த கட்டுபாடுகளை கடைபிடித்து நடைபெற்ற வேண்டும். என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது. பத்திரிகையாளர்களை கேவலமாக குஷ்பூ மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதே பத்திரிகையாளர்களின் விருப்பமாக உள்ளது.