பங்குச்சந்தை முதலீடு : காப்பீட்டு முகவரைக் கொன்ற நண்பர்கள்…
பங்குச்சந்தை மோகத்தில் காப்பீட்டு முகவர்களான நண்பர்களுக்குள் எழுந்த மனகசப்பு, ஒருவரைகொன்று எரிக்கும் அளவிற்கு வஞ்சம் தீர்க்கும் செயலாகமாறிய சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.மதுரை மஹால் முதல் தெருவைசேர்ந்தவர் 53 வயதான சிவக்குமார். காப்பீடுநிறுவனம் ஒன்றின் முகவராக பணியாற்றிவருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்கொடைக்கானலில் நடந்த காப்பீடு முகவர்களுக்கானகூட்டத்தில் மதுரையை சேர்ந்த விக்னேஷ்வாதிக்என்பவருடன் சிவக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அங்குபரஸ்பரம் அறிமுகம் ஆன அவர்கள், தொழிலில் முன்னேற்றம் காண்பது குறித்து ஆலோசித்துள்ளனர்.அப்போது பங்கு சந்தை முதலீடுகுறித்து சிவக்குமாரிடம் விக்னேஷ்வாதிக் விளக்கியுள்ளார். அதில் சிவக்குமார், 5 லட்சம்ரூபாய் கொடுத்து தனது பெயரில் பங்குசந்தையில் முதலீடு செய்ய கூறியுள்ளார்.அதனடிப்படையில் சிவக்குமார் பெயரில் முதலீடு செய்யப்பட்டதாககூறப்படுகிறது. ஆனால் அதற்கான பரிவர்த்தனைகளைவிக்னேஷ்வாதிக் கவனித்துள்ளார்.இதற்கிடையில்பங்கு சந்தையில் இழப்பு ஏற்பட்டதாகவும், அதில்சிவக்குமாரின் பணம் இழப்பை சந்தித்ததாகவிக்னேஷ்வாதிக் கூறியுள்ளார். அதை ஏற்க மறுத்தசிவக்குமார், தனது பணத்தை தன்னிடம்ஒப்படைக்குமாறு விக்னேஷ்வாதிக்கை எச்சரித்துள்ளார். பல மாதங்களாக நீடித்தஇந்த பிரச்னையில், சிவக்குமார் மூலம் விக்னேஷ்வாதிக்கிற்கு நெருக்கடி தரப்பட்டுள்ளது.இதனால் மனவேதனையில் இருந்த விக்னேஷ்வாதிக், சிலஆண்டுகளுக்கு முன் திருச்சியில் நடந்தகாப்பீடு முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்று தனக்கு நண்பராக அறிமுகமானதிண்டுக்கல்லை சேர்ந்த கணேஷ்பாபு என்பவரிடம்விபரத்தை கூறியுள்ளார். சிவக்குமாரை மிரட்டி தன்னை காப்பாற்றுல்மாறுகூறியுள்ளார்; அதற்காக பணம் தருவதாகவும்கூறியுள்ளார். அதன்படி இருவரும் திட்டமிட்டுஇரண்டு நாட்களுக்கு முன் வீட்டில் இருந்தசிவக்குமாரை விக்னேஷ்வாதிக் சந்தித்துள்ளார். தனது நண்பர் ஒருவர்பணம் தர இருப்பதாகவும், நேரில்வந்து அதை பெற்றுக் கொள்ளுமாறுகூறி சிவக்குமாரை பைக்கில் அழைத்து வந்துள்ளார். அவர்கள்இருவரும் பைக்கில் சமயநல்லூர் வந்து சேர, மறுமுனையில்திண்டுக்கல்லில் இருந்து காரில் வந்தகணேஷ்பாபு, அவர்கள் இருவரையும் சந்தித்துள்ளார்.பணத்தைசாலையில் வைத்து தர வேண்டாம்மறைவான இடத்திற்கு போகலாம் என முட்புதரானபகுதிக்கு சிவக்குமாரை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சென்றதும், மறைத்துவைத்திருந்திருந்த கத்தியை காட்டி சிவக்குமாரைமிரட்டியுள்ளனர். பதிலுக்கு சிவக்குமார் தகராறு செய்ய ஆத்திரமடைந்தகணேஷ்பாபு, கத்தியால் சிவக்குமாரை குத்த, விக்னேஷ்வாதிக் அவருக்குஉதவியுள்ளார். ரத்த வெள்ளத்தில் விழுந்தசிவக்குமாரை அடையாளம் தெரியாத பிணமாக மாற்றமுடிவு செய்த இருவரும் அருகில்இருந்த அம்மி கல்லை எடுத்துசிவக்குமாரின் முகத்தை சிதைத்தனர். எந்ததடயமும் இருக்க கூடாது என்பதற்காகபெட்ரோலை ஊற்றி சடலத்திற்கு தீமூட்டி தப்பினர்.சடலம் முழுமையாக எரியாமல் அணைந்த நிலையில் தகவல்அறிந்து அங்கு வந்த சமயநல்லூர்போலீசார் சடலத்தை சோதனையிட்ட போதுசிவக்குமாரின் ஆதார் கார்டு உள்ளிட்டமுக்கிய ஆவணங்கள் அனைத்தும் இருப்பதை அறிந்தனர். அவரது வீட்டில் சென்றுவிசாரித்த போது விக்னேஷ்வாதிக் அவரைஅழைத்துச் சென்றதை வீட்டார் கூறியதால்அவரை மடக்கி பிடித்து குற்றவாளிகள்இருவரையும் கைது செய்தனர். தொழிலில்முன்னேற வேண்டும் என்பதற்காக நண்பருடன் சேர்ந்த பங்கு சந்தைமோகத்தில் களமிறங்கி காப்பீடு முகவர், சக நண்பரால்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– ராஜா