தமிழகம்

அதிகரிக்கும் கள்ளச்சாராயம்

திருவண்ணாமலைமாவட்டத்தில் மதுக்கடை அடைக்கப்பட்டதை சாதகாமாக்கிக் கொண்டு ஏராளமான பழையசாராய வியாபாரிகள், மீண்டும் சாராயம் காய்ச்சி விற்கும்தொழிலை கையில் எடுத்துள்ளனர்.

திருவண்ணாமலைமாவட்டம் மலையையும் மலை காடுகளையும், வறண்டபூமியையும் அதிகமாக கொண்ட பகுதி.கடந்த 50 நாட்களாக டாஸ்மாக் மதுக்கடை அடைக்கப்பட்டதால் இந்த பகுதியில் உள்ளபழைய சாராய வியாபரிகள் மீண்டும்சாராயம் காய்ச்சி லாரி டியூப்புகளில் அடைத்துகிராமம் கிராமமாக விற்க தொடங்கியதால் காவல்துறையினர்அதிர்ச்சி அடைந்தனர்.மாவட்டகாவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தியின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல்கண்காணிப்பாளர் அசோக்குமார் நேரடி கண்காணிப்பில் இந்தகள்ளச்சாராய கும்பலை பிடிக்க சிறப்புதனிப்படைகள் அமைக்கப்பட்டது.

கையில் அரிவாளுடன் களம்இறங்கிய காவல்துறையினர், கடந்த ஒரு வாரத்தில்மட்டும் ஊர் ஊராக காடுகளில்பதுக்கி வைக்கப்பட்ட 20ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயஊறல்கள் நிரப்பபட்ட பேரல்களை அரிவாளால் வெட்டி அழித்தனர்.சாராயம்காய்ச்சும் இடத்தையும் அடித்து நொறுக்கி அழித்தனர்.காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்ட சாராயஊறல்களை தரையில் கொட்டி அழித்தகாவல்துறையினர், மொத்தமாக 3000 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல்செய்தனர். கார், இருசக்கர வாகனம்போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டவிரோதமாகசாராயத்தை காய்ச்சியது, விற்றது தொடர்பாக 120 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரே நாளில் மட்டும்25 பேரை சாராய ஒழிப்பு சிறப்புபடை அதிரடியாக கைது செய்துள்ளது. இவர்களிடம்இருந்து 820 லிட்டர் சாராயத்தை அதிகாரிகள்பறிமுதல் செய்தனர்.காவல்துறையினர்கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டதைதங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுகாட்டுக்குள் இரும்பு பேரல்களை வைத்துகள்ளசாராய ஆலைகளை குடிசை தொழில்போல நடத்தி வந்துள்ளர். அதிர்ஷ்டவசமாகஇந்த கும்பலிடம் சாராயம் வாங்கிக் குடித்துஉயிர்பலி ஏதும் நிகழ்வதற்கு முன்பாககாவல்துறையினர் சாராயம் காய்ச்சும் இடத்தைஅடித்து நொறுக்கி காலி செய்துள்ளது குறிப்பிடதக்கது.

இதற்கிடையேதிருவண்ணாமலையில் மதுக்கடை திறக்கப்பட்டதால் ஆர்வமாக மதுவாங்க சென்றகுடிமகன்களிடம் பாட்டிலுக்கு 30 ரூபாய் முதல் 40 ரூபாய்வரை கூடுதல் விலைவைத்து விற்பதாகவும்வேதனை தெரிவித்தனர்.

விலை உயர்வு என்றாலும்குடிமகன்கள் கை நிறைய பாட்டிலைவாங்கிச்சென்றனர். இங்கே மதுக்கடையை மூடுவதுமட்டுமே மது ஒழிப்புக்கு நிரந்தரதீர்வாகாது என்பதற்கு அதிக விலை கொடுத்துமதுவாங்கும் குடிமகன்களும், திருவண்ணாமலையில் தினமும் பிடிபடும் சாராயவியாபாரிகளுமே சாட்சி..!போதை எப்போதும் தவறான பாதை என்பதைகுடிமகன்கள் மனதளவில் திருந்தினால் மட்டுமே மதுவை ஒழிக்கஇயலும் என்பதே கசப்பான உண்மை..!

பெண் போலீஸ் கையை முறித்தகஞ்சா வியாபாரி..!

ரூ.20 லட்சம் பறிமுதல்பிரபல பெண் கஞ்சாவியாபாரி ஒருவர்தற்போது பெண் போலீசை கையைமுறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாணியம்பாடியில்பல வருடங்களுக்கு முன்பு தனியாக சிக்கியகாவல் அதிகாரி ஒருவரை கடித்துவிட்டு வீட்டிற்குள் வைத்து பூட்டிச்சென்றவர் கஞ்சாவியாபரி மகேஸ்வரி. தற்போது எரிசாராயம் மற்றும்கஞ்சா வியாபாரத்தை குடும்ப தொழிலாக செய்துவந்த இவர் மீண்டும் போலீசைதாக்கி கையை முறித்துள்ளார்

.வாணியம்பாடிபகுதியில் கஞ்சா விற்பனை குறித்துதகவல் அறிந்து அங்கு சோதனைக்குசென்ற தனிப்படை போலீசாரை தனது குடும்பத்தினருடன் சேர்ந்துதாக்கிய மகேஸ்வரி, மடக்கி பிடிக்க முயன்றசூர்யா என்ற பெண் போலீசின்கையை முறித்து தூக்கி வீசியுள்ளார். இதையடுத்துதுப்பாக்கி முனையில் அவரையும் அவரது கணவர் உள்ளிட்ட7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மகேஸ்வரியின்வீட்டிற்குள் பதுக்கி வைத்திருந்த 21கிலோகஞ்சாவையும், கட்டுகட்டுக்களாய் பானையில் போட்டு வைத்திருந்த ரூபாய்நோட்டுக்களையும் சில்லரை காசு மூட்டைகளையும்போலீசார் கைப்பற்றினர். அதில் மொத்தம் 20 லட்சம்ரூபாய் இருந்தது.

போதை பொருள் கடத்தல் தடுப்புச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்படும் நபர்,கஞ்சா விற்பனை மூலம்சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் அரசு கையகப்படுத்த முழுஅதிகாரம் உள்ளதால் கஞ்சா வியாபாரி மகேஸ்வரியின்பெயரில் உள்ள 40 வீட்டு பத்திரங்களையும்போலீசார் கைபற்றியுள்ளதாகவும் மற்ற சொத்துக்கள் குறித்துவிசாரித்து வருவதாகவும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்விஜயகுமார் தெரிவித்தார்.புல்லட்,ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் என மகேஸ்வரி அந்தபகுதியில் குட்டி தாதா போலவலம் வந்துள்ளார். கஞ்சா விற்பனை மற்றும்சாராய விற்பனை குறித்து போலீசுக்குதகவல் கொடுத்தால் சம்ந்தப்பட்ட நபர்களை தாக்குவதையும் வாடிக்கையாகசெய்துள்ளார் என்று சுட்டிக்காட்டும் காவல்துறையினர்அவரால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் உரியநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.தமிழகத்தில்மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கிராமப்புறங்களில் குடிகாரர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button