டாஸ்மாக் மேல் உள்ள அக்கறை தமிழர்கள் மீது வேண்டாமா? : கனிமொழி காட்டம்!
தமிழகத்தில்தள்ளி வைக்கப்பட்ட 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுஜூன் மாதம் 1ஆம் தேதிமுதல் 12ஆம் தேதி வரைநடைபெறும் என அறிவித்த தமிழ்நாடுஅரசு, அதற்கான அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.மேலும், ஒத்தி வைக்கப்பட்ட பிளஸ்1தேர்வுகள், ஊரடங்கால் 12ஆம் வகுப்பு தேர்வைஎழுத முடியாமல் விடுபட்டவர்களுக்கான மறு தேர்வுக்கான தேதிகளும்அறிவிக்கப்பட்டுள்ளன.எனினும்,10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதன்மூலம் கொரோனா பரவும் அபாயம்உள்ளது. எனவே, தமிழகத்தில் கொரோனாதொற்று பரவல் இல்லை என்றநிலை வரும் வரை மாணவர்களின்நலனை கருதி பொதுத் தேர்வைதள்ளி வைக்க வேண்டும் எனதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதனிடையே,ஜூன் 1ஆம் தேதி முதல்10ஆம் தேதி வரை நடக்கும்என அறிவிக்கப்பட்டிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்ஜூன் 15ஆம் தேதி முதல்ஜூன் 25ஆம் தேதி வரைநடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன்அறிவித்துள்ளார். அதேபோல், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுஜூன் 16ஆம் தேதியும், விடுபட்டவர்களுக்கான12ஆம் வகுப்பு மறுதேர்வு ஜூன்18ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும்,ஜூன் 15ஆம் தேதிக்குள் கொரோனாமுற்றிலும் குணமாகிவிடும் என கருத முடியாது.எனவே, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வைகொரோனா பாதிப்பு முழுவதுமாக நீங்கிய பின்னரே நடத்தவேண்டும் என அரசியல் கட்சிதலைவர்கள், கல்வியாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினர்கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்த நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர்செங்கோட்டையனை தலைமை செயலகத்தில் திமுகஇளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்ககோரி மனு அளித்தார். இந்தசந்திப்பின் போது, சட்டமன்ற உறுப்பினர்கள்எழிலரசன், தாயகம் கவி ஆகியோர்உடனிருந்தனர்.அதன்பின்னர்செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், கொரோனாபாதிப்பு சீராகி இயல்புநிலை திரும்பும்போது10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தவேண்டும். கல்வி முக்கியம். அதைப்போலத்தான்மாணவர்களின் உயிரும் முக்கியம். 10ஆம்வகுப்பு பொதுத்தேர்வு குறித்து 2,3 நாட்களில் நல்ல முடிவை அறிவிப்பதாகஅமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் என்றார்.முன்னதாக,10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டியதின் அவசியம் குறித்தும், இதுதொடர்பாகஅரசுக்கு அழுத்தம் தரும் வகையில் எடுக்கவேண்டியநடவடிக்கைகள் குறித்தும் திமுக இளைஞரணி மற்றும்மாணவரணியின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள்கூட்டம் காணொளிக் காட்சி மூலமாக நடைபெற்றது.அதில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வைதள்ளி வைக்க வேண்டும் என்றுதீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.திமுக மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழிமாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனாநிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில்செய்தியாளர்களைச் சந்தித்த அவர் டாஸ்மாக் கடைகள்நேரம் நீட்டிப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.“தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளைதிறந்தது மட்டுமல்லாமல் நேரத்தை அதிகரித்து டோக்கன்முறைப்படி மது பானம் விநியோகிக்கிறது.டாஸ்மாக் கடைகளுக்கான நுகர்வோர்களை இழுப்பதில் ஆர்வம் காட்டும் அரசுவெளி நாடுகளில் தவித்து வரும் தமிழர்களைமீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.“வெளி நாடுகளில் தமிழர்கள் சில மாதங்களாக பெரும்இன்னலுக்கு ஆளாகிவருகின்றனர். தங்கள் வேலைகளை இழந்துள்ளனர்.கல்வியைத் தொடரமுடியாமல், விடுதிகள் மூடப்பட்டுள்ளதால் தங்குவதற்கும், உணவுக்கு வழியின்றி தவிக்கின்றனர். அவர்கள் தமிழ்நாட்டுக்கு உடனடியாகமீட்டுக் கொண்டுவரப்பட வேண்டும்.
தமிழ்நாட்டுக்குநேரடியாக ஒன்றிரண்டு விமானங்களே உள்ளன. பிற விமானங்கள்மற்ற மாநிலங்களில் தரையிறங்குகின்றன. அதில் தமிழர்கள் மிகக்குறைவானவர்களே வருகின்றனர். மேலும் பிற மாநிலங்களிலிருந்துதமிழகத்திற்கு 18 மணி நேரத்திற்கும் மேலாகபயணித்து வரவேண்டியுள்ளது. இதில் கர்ப்பிணி பெண்களும்விதிவிலக்கு அல்ல” என்று கனிமொழிகூறியுள்ளார்.தமிழர்கள்ஊர் திரும்ப தமிழக அரசுஅனுமதியளிக்க மறுக்கிறது. மேலும் தமிழ்நாட்டுக்கு திரும்புவர்கள்கண்டிப்பாக சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இவ்வளவு பிரச்சினைகள்ள் இருக்கும்போதுதமிழ்நாடுஅரசு டாஸ்மாக் விற்பனையில் மட்டுமே குறியாக உள்ளது.இது கொரோனா பரவலுக்கு காரணமாகஇருக்குமோ என்ற பெரிய பயம்உள்ளது” என்றும் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.