அதிமுக, திமுகவில் நிர்வாகிகள் பதவிகள் பறிக்கப்படுகிறதா?
ஊரடங்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டு இரண்டு மாதங்களைக் கடந்தநிலையில் தமிழகம் முழுவதும் அனைத்துதொழில்களும் முடக்கப்பட்டுள்ளன. சில மாவட்டங்களில் சிலதளர்வுகளை தமிழக அரசு அறிவித்தாலும்பொது போக்குவரத்து இல்லாததால் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் வேலையாட்கள்வருவதில் சிரமம் நீடிக்கவே செய்கிறது.நகரங்களில் வியாபார நிறுவனங்கள் திறந்திருந்தாலும்பொருட்களை வாங்குவதற்கு ஆட்கள் வராததால் எந்தவியாபாரமும் சுபிட்சமாக இல்லை. ஆனால் தமிழகம்முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மட்டும் வியாபாரம் ஜோராகநடைபெறுகிறது.
கடந்த இரண்டு மாதங்களாக கட்டுப்பாட்டுடன்இருந்த குற்றச்சம்பவங்கள் தற்போது அதிகரிக்க துவங்கியுள்ளது.கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்துஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து ஆளும் கட்சியினர்,எதிர்கட்சியினர் என போட்டி போட்டுபொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். நிவாரணப்பொருட்கள் வழங்குவதிலும் கிராமப்புறங்களுக்குச் செல்லாமல் நகரங்களில் மட்டுமே நிவாரணப் பொருட்களைவழங்கி பாகுபாடு பார்க்கிறார்கள் என்று கடந்த இதழில்எழுதி இருந்தோம். இராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும்ஆளும் அதிமுகவின் மாவட்டச் செயலாளர் முனியசாமி ஒவ்வொரு ஒன்றியங்களாக தனதுசொந்த செலவில் அந்தந்த ஒன்றியநிர்வாகிகள் மூலமாக கிராமப்புறங்களுக்கே நேரடியாகச்சென்று நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார்.பொதுத்தேர்தலுக்குபிரச்சாரத்திற்கு சென்று தனது கட்சிக்குஓட்டு கேட்க மாவட்டம் முழுவதும்சுற்றுப்பயணம் செய்ததுபோல் அட்டவணை தயார் செய்துஒவ்வொரு கிராமமாக சென்று நிவாரணப் பொருட்களைவழங்கி வருவதாக பொதுமக்கள் கூறுகிறார்கள்.கடந்த இதழில் நாம் குறிப்பிட்டதிருவாடனை சட்டமன்ற தொகுதி, இராமநாதபுரம் சட்டமன்றதொகுதிகளில் தற்போது நிவாரணப் பொருட்களைவழங்கி வருகிறாராம்.அதேபோல்பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நயினார் கோவில், பரமக்குடிஆகிய இரண்டு யூனியனைச் சுற்றியுள்ளகிராமப்புறங்களிலும் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகர் நேரடியாகச் சென்று நிவாரணப் பொருட்களைவழங்கியிருக்கிறார். இந்த நிவாரணப் பொருட்கள்அனைத்தும் தற்போதைய சூழ்நிலையில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தாலும்,பொதுபோக்குவரத்தை இந்த அரசு துவங்கி,மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பும்வரை நிரந்தரமாக மக்களின் கூட்டம் மாறப்போவதில்லை.இராமநாதபுரம்மாவட்டத்திற்கு அமைச்சர் இல்லாததால் மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர்களும் சொந்த செலவில் நிவாரணப்பொருட்களை வழங்கி வருகிறார்கள். பெரும்பாலானமாவட்டங்களில் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் தொழில் நிறுவனங்களுக்கு நன்கொடையாகவசூல் செய்து தங்கள் செலவில்நிவாரணம் கொடுப்பது போல் காட்டிக் கொள்கிறார்கள்.சில இடங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் வீட்டை விட்டே வெளியேறாமல்வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். இவர்களைப் பற்றிய செய்தி எடப்பாடிக்குதெரிவிக்கப்பட்டிருக்கிறது.சட்டமன்றத்தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் கட்சிக்கும்,ஆட்சிக்கும் ஒத்துழைக்காத கட்சி நிர்வாகிகளை மாற்றமுடிவு செய்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி. அந்த வகையில் தற்போது11 மாவட்டங்களில் சிறப்பாக செயல்படாத மாவட்டச் செயலாளர்களை மாற்றி புதிய மாவட்டச்செயலாளர்களை நியமிக்க இருக்கிறார்கள். ஏற்கனவே இராஜேந்திர பாலாஜியிடமிருந்துபறிக்கப்பட்ட விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவி, அமைச்சர் பாண்டியராஜனுக்குவழங்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகதகவல். இதேபோல் திமுகவிலும் துணைப்பொதுச்செயலாளராக இருந்த விபி துரைச்சாமிபாஜக தலைவர் முருகனை சந்தித்த்துவாழ்த்து தெரிவித்தார். அவர் பாஜக, அதிமுகஉயர்மட்ட நிர்வாகிகளுடன் கட்சியில் சேர்வதற்கு பேச்சுவார்த்தை நடத்தியது தெரிந்ததும் அவரிடம் இருந்த துணைப்பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டு மாநிலங்களவைஉறுப்பினர் அந்தியூர் செல்வாராஜீக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வி.பி.துரைச்சாமிபாஜகவில் இணைந்திருக்கிறார். திமுக அதிமுக ஆகிய இரண்டுகட்சிகளிலும் இருந்து விலகுபவர்கள் மாறிமாறிஇந்த இரண்டு கட்சிகளுக்குள் தான்இருப்பார்கள். ஆனால் தற்போது திராவிடசித்தாந்தத்திற்கு எதிரான கொள்கைகளைக் கெண்டபாஜகவில் துரைச்சாமி இணைந்திருப்பது திமுகவின் அடிப்படையில் எங்கோ தவறு நடப்பதாகவேதெரிகிறது. திமுக தலைமையில் எ.வ.வேலுவின் ஆதிக்கம்அதிகரித்துள்ளதாலும் திமுகவிலும் மாற்றங்கள் வர இருப்பதாகவும் தகவல்கள்வந்தவண்ணம் உள்ளது.