அரசியல்

அதிகரிக்கும் கொரோனா பரவல்.. அதிகாரிகளே காரணம்..! : ராமதாஸ்

சென்னையில்தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகரித்துவரும் நிலையில் பல்வேறு கேள்விகளை ராமதாஸ்எழுப்பியுள்ளார். மற்ற மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்டநிலையில் சென்னையில் முடியாமல் போனதற்கான காரணத்தையும் சில யோசனைகளையும் முன்வைத்துள்ளார்.

தமிழகத்தில்கொரோனா தொற்று உச்சத்தை அடைந்ததற்குசென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து பரவிய நோய்த் தொற்றுதான் என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால், கோயம்பேடு சந்தையால்பாதிக்கப்பட்ட திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி,அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கொரோனாபரவல் வேகமாக கட்டுப்படுத்தப்பட்டு விட்ட நிலையில்,சென்னையில் மட்டும் நோய்ப்பரவல் கட்டுப்படுத்தப்படாததுஏன்? என்பதைத் தான் புரிந்து கொள்ளமுடியவில்லை. சென்னையில் நோய்த்தடுப்பு பணிகள் திறம்பட மேற்கொள்ளப்படவில்லையோ?என்ற ஐயத்தை தான் இதுஏற்படுத்துகிறது. அவ்வாறு நம்புவதற்கு நிறையகாரணங்கள் உள்ளன.

கோயம்பேடுசந்தையிலிருந்து ஏப்ரல் மாத இறுதியில்தான் அதிக எண்ணிக்கையில் தொற்றுகள்பரவத் தொடங்கின. உடனடியாக நோய்த்தொற்றுகளைக் கண்டறியும் பணி தொடங்கப்பட்டதுடன், மேஒன்றாம் தேதியே சென்னை மாநகராட்சிக்கானகொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாகஜே.இராதா கிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.கோயம்பேடு சந்தையும் மே 4-ஆம் தேதியுடன்மூடப்பட்டு விட்டது.

நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் ஏப்ரல் 30-ஆம் தேதி தொடங்கப்பட்டதாகவைத்துக் கொண்டால், அடுத்த 14 நாட்களில், அதாவது மே 13-ஆம்தேதிக்குள் சென்னையில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நோய்ப்பரவல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.கோயம்பேடுசந்தை மூலம் நோய்த்தொற்று பரவத்தொடங்குவதற்கு முன் கோடம்பாக்கம் மண்டலத்தில்இரட்டை இலக்கத்திலும், வளசரவாக்கம் மண்டலத்தில் ஒற்றை இலக்கத்திலும் தான்நோய்த்தொற்றுகள் இருந்தன. இராயபுரம், திருவிக நகர், தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்கள் தான்முன்னணியில் இருந்தன. ஆனால், கோயம்பேடு நோய்ப்பரவல்தொடங்கிய சில நாட்களில், சந்தையைஒட்டியுள்ள பகுதிகளில் நோய்ப்பரவல் வேகமாக அதிகரித்து, கோடம்பாக்கம்மண்டலம் முதலிடத்தைப் பிடித்தது.

சென்னைமாநகராட்சிக்கான நோய்த்தடுப்பு சிறப்பு அதிகாரியாக இராதாகிருஷ்ணன்நியமிக்கப்பட்ட போது, கொரோனா விரைவில்கட்டுக்குள் வரும் என்று நம்பினேன்;அதை வெளிப்படுத்தவும் செய்தேன். ஆனால், கடலூர், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில், அந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள்,பிற அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ள நிலையில், சென்னையில் சிறப்பு அதிகாரி, மாநகராட்சிஆணையர், மண்டல பொறுப்பு அதிகாரிகள்என ஏராளமான மூத்த ... அதிகாரிகள்இருந்தும் கொரோனா வைரஸ் நோயைக்கட்டுப்படுத்த முடியாதது பொதுமக்கள் மத்தியில் இதுவரை நிலவி வந்தநம்பிக்கையை குலைத்துள்ளது.

சென்னையில்கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள்பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மத்திய அரசின் சார்பில்தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்ஆலோசகரும், ..பஅதிகாரியுமான திருப்புகழ் தலைமையிலான உயர்நிலைக்குழு சென்னைக்கு வந்து 5 நாட்கள் தங்கியிருந்துகொரோனா தடுப்பு பணிகள் குறித்துஅதிகாரிகளுடன் ஆலோசனைகளை நடத்தி அறிவுரைகளை வழங்கியது.முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் ஒவ்வொரு நாளும் கொரோனாதடுப்புப் பணிகள் குறித்து காலையில்தலைமைச் செயலகத்திலும், மாலையில் அவரது இல்லத்தில் உள்ளமுகாம் அலுவலகத்திலும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்ந்துஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனாவைரஸ் நோய் தடுப்பில் முதலமைச்சர்பழனிச்சாமி காட்டும் அக்கறை பாராட்டத்தக்கது. ஆனால்,களத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் போதிய நடவடிக்கை மிகவும்கவலையளிக்கிறது.

கொரோனாவைகட்டுப்படுத்தும் விஷயத்தில் நம்பிக்கை வார்த்தைகள் மட்டுமே பயனளித்து விடாது.கொரோனாவால் மும்பை, தில்லி ஆகியநகரங்களுக்கு அடுத்தப்படியாக சென்னை தான் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையான 6750 என்பது, இந்தியாவில் மொத்தமுள்ள36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில்32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின்அளவை விட அதிகமாகும். இதனால்மக்களிடம் அச்சம் அதிகரித்துள்ள நிலையில்,இன்னும் நம்பிக்கை வார்த்தைகளை மட்டும் பேசிக்கொண்டிருப்பது நம்பிக்கையைத்தராது; மாறாக சலிப்பை மட்டுமேஏற்படுத்தும். எனவே, இனியும் கொரோனாதடுப்பு பணிகளை வார்த்தைகளில் காட்டாமல்செயலில் காட்ட வேண்டும்.

சென்னையில்வெகு விரைவில் கொரோனா பரவலை முற்றிலுமாககட்டுப்படுத்தி மக்களிடம் நிலவும் அச்சத்தை மனநிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்ற வேண்டும்எனக்குறிப்பிட்டுள்ளார்.கொரோனாபரவல் தமிழ்நாட்டில் குறையாமல் அதிகரித்து வருவதை ஆதாரத்துடன் ஒப்புக்கொள்ளும்ராமதாஸ் அதற்கான காரணமாக அதிகாரிகளைமட்டுமே குறிப்பிட்டுள்ளார். மத்தியில் ஆளும் பாஜகவுடனும், மாநிலத்தில்ஆளும் அதிமுகவுடனும் கூட்டணி வைத்துள்ள பாமக,கூட்டணிக் கட்சிகளை விட்டுக்கொடுக்காமல் அரசை விமர்சிப்பதை தவிர்த்துள்ளார்.அதே சமயம் கண்ணுக்கு தெரிந்தபாதிப்புகளை பட்டியலிட்டு அதற்கான காரணமாக அதிகாரிகளைகைகாட்டியுள்ளார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button