பிறந்தநாள் கேக் வெட்ட காதலர் வராத காரணத்தினால் பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய இருப்புப்பாதை காவல் நிலைய காவலராக பணியாற்றி வருபவர் சரண்யா. இவர் அயனாவரம் பனந்தோப்பு ரயில்வே காலனி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காக பணிபுரிந்து விட்டு மாலை அயனாவரத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார்.
வீட்டுக்குச்சென்றவர், அறையில் உள்ள பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். சரண்யாவின் தோழி ராஜேஸ்வரி என்பவர் கொடுத்த தகவலின் பேரில் ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் சரண்யா உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் சரண்யாவின் காதலரான ஏழுமலை என்பவருக்கு பிறந்தநாள் என்பதும், இதனை கொண்டாடுவதற்காக காவலர் சரண்யா வீட்டிற்கு வரும்போது கேக் வாங்கி வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், கேக் வெட்டுவதற்கு ஏழுமலை வராததால் மன உளைச்சலுக்கு ஆளான சரண்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என போலீசாரின் முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
super news thankfully Frank Shankar tamil nadu c.m bribe case registered against v d v ac take action against police department thankfully Frank Shankar
இந்தப் பெண் காவலர் செய்தது மிகவும் தவறான வழி காதலர் வரவில்லை என்றால் என்ன அதற்காக ஏன் தூக்கில் தொங்க வேண்டும் கோழைத்தனமான செயல் இவ்வளவு தைரியம் இல்லாத ஒரு காவலர் இந்த பூமியில் இருந்தென்ன லாபம்.