ஆன்லைன் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் வாட்ஸ்அப் மூலமாக கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடத்தினார்கள்.
ஊரடங்குநேரத்தில் மாணவர்களுடைய நேரத்தை பயனுள்ளதாக்கும் வகையில் சிவகங்கைமாவட்டத்தில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் லெ.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் முத்துலெட்சுமி, செல்வமீனாள், முத்துமீனாள், ஸ்ரீதர் ஆகியோர் முயற்சி எடுத்துவருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக இப்பள்ளிமாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டிஆன்லைன் மூலமாக ஆசிரியர்கள் நடத்தினார்கள்.பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் கூலி வேலை பார்ப்பதால்சில மாணவர்களிடம் மட்டுமே வாட்ஸ்அப் உள்ளஆண்ட்ராய்டு மொபைல் போன் உள்ளது.வாட்சப் உள்ள மாணவர்கள்போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டியில் ஒன்று முதல் ஐந்தாம்வகுப்பு வரை பங்கேற்ற மாணவர்களில் சிறப்பாகஓவியம் வரைந்த மாணவர்கள் முதல்வகுப்பு சபரீஸ்வரன், இரண்டாம் வகுப்பு ஹரிப்பிரியா, மூன்றாம்வகுப்பு ப்ரஜித், நான்காம்வகுப்பு முத்தையன், ஐந்தாம் வகுப்பு திவ்யஸ்ரீஆகியோர் ஓவியங்கள் சிறந்த ஓவியங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டது.பள்ளி திறந்த பிறகு போட்டியில் பங்கேற்றுவெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்ற மற்ற மாணவர்களுக்கும் ஆறுதல்பரிசு வழங்கப்படும்.
கடந்த சில வாரங்களுக்கு முன்புஇப்பள்ளி மாணவர்களை மொபைல் வழியாக பேசசெய்து பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.அனைத்து மாணவர்களுக்கும் வீட்டிற்கு புத்தகங்கள் கொடுத்துவிட்டு, புத்தகம் படித்து வருபவர்களுக்கு பரிசுஎன்றும் அறிவித்து,ஊரடங்கு நேரத்திலும் தொடர்ந்து ஆசிரியர்கள் பெற்றோர்கள் உடன் தொடர்பு கொண்டுமாணவர்களின் நலன் குறித்தும், புத்தகங்கள் படிப்பது குறித்தும் அறிவுறுத்தி வருகிறார்கள்.மாணவர்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் அவர்களுடைய மனநிலைகள் மாறாமல் இருப்பதற்காக இதுபோன்றமுயற்சிகளை தொடர்ந்து ஆசிரியர்கள் எடுத்து வருவதாக தலைமையாசிரியர்லெ.சொக்கலிங்கம் தெரிவித்தார். இதற்கு மாணவர்களிடமும் நல்லவரவேற்பு உள்ளது.
புத்தகங்கள்படிக்கும் மாணவர்களுக்கு பரிசு அறிவிப்பு
ஊரடங்கு நேரத்திலும் மொபைல் போன் வழியாக மாணவர்களை ஆர்வப்படுத்தி புத்தகங்களை வாசிக்க சொல்லி வருகின்றனர் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள்.ஊரடங்கு துவங்கும் நாளுக்கு முன்னதாக இப்பள்ளியில் 6,7,8 படிக்கும் மாணவர்களுக்கு வீட்டில் படித்து வர புத்தகங்கள் வழங்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களுக்கு ஊரடங்கு காலத்தில் விடுமுறைக்கு முன்பு வீட்டில் ஒவ்வொரு மாணவரும் படிக்கும் வகையில் மாணவர்களின் வீட்டுக்கு நான்கு, நான்கு புத்தகங்கள் கொடுத்து படிக்க சொல்லி கொடுத்து அனுப்பினார்கள். அதன் தொடர்ச்சியாக மாணவர்களின் வீட்டுக்கு ஆசிரியர்கள் மொபைல் போன் வழியாக பேசி மாணவர்களின் நலன் விசாரிப்பதோடு, புத்தகங்களையும் படிக்க சொல்லி வருகின்றனர். புத்தகம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கருப்பையா, ஸ்ரீதர், முத்து மீனாள்,முத்து லெட்சுமி,செல்வமீனாள் ஆகியோர் செய்து இருந்தனர். மாணவர்களுக்கு புத்தகம் படிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகங்களில் படித்ததை கேட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.