தமிழகம்

“சித்தர்கள் ரகசியம் காத்ததால்” வெளிநாட்டு மருந்துகளை நம்பியிருக்க வேண்டிய நிலை..!

தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழ் மொழியில் வழிபாடு நடத்துவது குறித்த கருத்து கேட்பு நிகழ்ச்சி பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அடிகளார் கூறுகையில் தமிழ் வழிபாடு என்பது 2000 ஆண்டுகள் பழமையானது எனவும் காரைக்கால் அம்மையார் துவங்கி நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் கடந்த 1954 ஆம் ஆண்டு திருக்கோயில் திருவிழா நன்னீராட்டு பெருவிழாக்களை தமிழிலேயே நடத்தியது பேரூர் ஆதீனம், சிரவை ஆதீனம், குன்றக்குடி அடிகளார் வழிகாட்டுதல் படி தொடங்கின. இந்நிலையில் பெருந்திட்ட கோயில்களிலும் தமிழில் வழிபாடு நடத்தப்படவேண்டும் என நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்த நிலையில் தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்த செயல்முறைகளை வகுத்து வழங்க இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து குன்றக்குடி அடிகளார் தலைமையில் பேரூர் ஆதீனம், சிரவை ஆதீனம், சக்திவேல், முருகன், சுகிசிவம், குமரலிங்கம் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோவை மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தமிழ் வழிபாட்டு செயல்முறை வகுப்பது குறித்து கருத்து கேட்பு நடத்தப்பட்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக பல்லடத்தில் தற்போது கருத்து கேட்பு நடத்தப்படுவதாகவும் அடிகளார் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் கடந்த 2006 ஆம் ஆண்டு அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், இறைவன் குறித்த ரகசியங்கள் எதுவும் இல்லை எனவும், இறைவன் எல்லோருக்கும் எளிமை மற்றும் பிரியமானவன் எனவும் கூறினார். சித்தர்கள் பல்வேறு நோய்களுக்கு மருந்துக்களை கண்டுபிடித்ததாகவும், ரகசியம் காத்ததால் மருந்துக்கள் பயனில்லாமல் போனதாகவும், இதனால் வெளிநாட்டு மருந்துக்களை நம்பி இருக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button