தமிழகம்

5 நாட்களில் கொரோனா குணமாவது சாத்தியமா ? : சித்த மருத்துவர் வீரபாபு

ஆங்கிலமருத்துவத்துடன் சித்தமருத்துவம் இணைந்தால் 5 நாட்களில் கொரோனாவை குணப்படுத்திவிட முடியும் என்று சவால் விட்டசித்தமருத்துவர் வீரபாபு என்பவர், கொரோனாவால்பாதிக்கப்பட்ட 60 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்றுக்குள்ளான நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 60க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு போதிய படுக்கைவசதி இல்லாமல் அரும்பாக்கம் வைஸ்னவா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக குணமாக்க முதல் முறையாக ஆங்கில மருந்துகளுடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் சித்த மருத்துவ முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சித்தமருத்துவ முறையில் 15 வகையான மூலிகை மருந்துகளை கொண்டு தயார் செய்யப்பட்ட கசாயம் மற்றும் தூதுவளை சூப் கொடுத்து சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார் முறைப்படி சித்தமருத்துவம் பயின்றவரான மருத்துவர் வீரபாபு..!

இங்குள்ள நோயாளிகளுக்கு ஆங்கில மருந்து மாத்திரைகளுடன், கபசுரக்குடி நீர் மற்றும் அதிமதுரம், சித்தரத்தை, சுக்கு, திப்பிலி, மிளகு, துளசி உள்ளிட்ட 15 வகையான மூலிகை அடங்கிய தேநீர் 3 வேளையும் கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த வீரபாபு, தனது சித்த மருத்துவத்தின் மூலம் 5 நாட்களில் பாசிட்டிவ் நிலையில் இருந்து நெகட்டிவ் ரிசல்ட்டுக்கு கொண்டு வரும் அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுவர இயலும் என்றும் கூறினார்.

அதே நேரத்தில் தன்னை சித்தமருத்துவர் என கூறிக்கொண்டு கொரோனாவுக்கு மருத்துவம் பார்ப்பதாக சமூக வலைதளங்களில் கூறிவரும் திருதணிகாசலம் என்பவர் போலி மருத்துவர் என்றும், அவர் மீது சட்ட நவடிக்கை எடுக்க சித்தமருத்துவர் சங்கம் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். தாம் சொன்னபடி 5 நாட்களில் கொரோனா நோயாளிகளை குணமாக்கினால், தனது சிகிச்சை முறையை கொரோனாவுக்கான சிகிச்சை முறையாக அரசு அங்கீகரிக்கும் என்றும் சித்தமருத்துவர் வீரபாபு தெரிவித்தார்.

ஒருவேளை கொரோனா நோயாளிகளுக்கு சித்தமருத்துவம் கைகொடுக்கும் பட்சத்தில், சித்தமருத்துவத்தின் சரித்திர சாதனையாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை..!

கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிவந்த சித்த மருத்துவர் தணிகாசலத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சென்னைகோயம்பேட்டில் ரத்னா சித்த மருத்துவமனைஎனும் பெயரில் மருத்துவமனை நடத்திவந்த தணிகாசலம் என்பவர், தன்னிடம் 6 கொரோனா நோயாளிகளை ஒப்படைத்தால்ஒரே நாளில் குணமடைய செய்துவிடுவேன் என்றும், அதற்கான மருந்து தன்னிடம்இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோவெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோ பதிவு வைரலானநிலையில், தவறான, ஆதாரமற்ற தகவல்களைஅவர் பரப்புவதாகவும், தணிகாசலம் மீது தகுந்த நடவடிக்கைஎடுக்கவும் இந்திய மருத்துவம் மற்றும்ஹோமியோபதி துறை சார்பில் காவல்துறையில்புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தணிகாசலம் மீது தொற்றுநோய் தடுப்பு,பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தடை உத்தரவை மீறுதல்உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தபோலீசார், தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.அவர் வெளியிட்டிருந்த வீடியோ பதிவின் Ip Address மூலம் தணிகாசலம் தேனியில்இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அங்கு விரைந்த தனிப்படைபோலீசார், தணிகாசலத்தை கைது செய்து சென்னைக்குஅழைத்து வந்துள்ளனர்.

  • வேல்மணி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button