தமிழகம்

விமான கட்டணத்துக்கு இணையாக ஆம்னி பேருந்து கட்டணம் ! விழாக்காலங்களில் சிறப்பு விமானங்கள் இயக்க கோரிக்கை !

தமிழகத்தில் விழாக்கால நேரங்களில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல வேண்டி அதிகமாக ஆம்னி பேருந்துக்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் விழாக்காலங்களில் ஆம்னி பேருந்துக்களின் கட்டணம் தாறு மாறாக ஏற்றம் கண்டு சாமானிய மக்கள் ஆம்னி பேருந்துக்களை பயன்படுத்த அதிக கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

மேலும் திருப்பூரிலிருந்து சென்னை செல்ல ரூபாய். 2,900/- வரை கட்டணமாக வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனிடையே ஆம்னி பேருந்துக்களின் அபரிவிதமான கட்டணக்கொள்ளையால் பொதுமக்கள் பாதிப்படைவதை தடுக்க விழாக்காலங்களில் விழாக்கால சிறப்பு விமான சேவைகளை வழங்கினால் ஆம்னி பேருந்து கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்யமுடியும் எனவும், பயண நேரமும் மிச்சமாகும்.

விமான சேவைகளை விழாக்காலங்களில் அதிக அளவு இயக்க தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஆ.அண்ணாதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button