அரசியல்

மத்திய அரசின் பதில் கிடைத்த பின்னரே CAA, NRC குறித்து முடிவெடுக்கப்படும் : முதல்வர்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி  முதலமைச்சர் இல்லத்தில் தமிழக அரசுத் தலைமை காஜி டாக்டர். சலாவுத்தீன் முஹமத் அய்யூப் சாஹீப் மற்றும் காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் பொதுச் செயலாளத் தாவூத் மியாகான் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழு முதலமைச்சரைச் சந்தித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம்  தாவூத் மியாகான், “ சிகிகி க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாகவும், ழிறிஸி-ஐ தமிழகத்தில் கொண்டுவருவதால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் ழிஸிசி-ஐ அனுமதித்தால் அது ழிறிஸி-ஐ அனுமதித்தது போலாகிவிடும்” என்பது குறித்தும் எடுத்துரைத்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், தங்களது கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட முதலமைச்சர் நிச்சயம் மத்திய அரசிடம் இதுபற்றி எடுத்துரைப்போம் எனவும், அடுத்த 2 மாதங்களுக்கு ழிறிஸி ஐ அமல்படுத்த வாய்ப்பில்லை எனவும் கூறியது தங்களுக்கு ஆறுதல் அளிப்பதாக தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், மத்திய அரசிடமிருந்து தெளிவான ஒரு பதில் கிடைத்த பின்னரே இது குறித்து அரசு முடிவெடுக்கும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசியஅவர், தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்கள் முழுவதும் மக்களின் எழுச்சி காரணமாக ஏற்பட்டவை  அதை கைவிடுவது குறித்து மக்கள்தான் முடிவெடுக்கவேண்டும் எனவும் கூறினார். மேலும், இம்மூன்று சட்டங்கள் தொடர்பான தங்களது நிலைப்பாட்டில்எவ்வித மாற்றமும் இல்லை. போராட்டங்கள் நடத்தும் எண்ணம் மக்கள் மனதிலிருந்து மாறவேண்டும்என்றால் அதற்கான நடவடிக்கைகளை அரசுதான் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

சட்டபேரவை நிகழ்வுகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் என்.பி.ஆர் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று கூறியது பேரவையின் மாண்பிற்கு எதிரானது என்று துரைமுருகன் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆர்.பிஉதயகுமார், ’செய்தியாளர்களிடம் எந்த புதிய திட்டங்களையும் அறிவிக்கவில்லை. என்.பி.ஆரை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறுபான்மையினரிடையே பதட்டமான சூழல் ஏற்படுத்தும் விதமாக எதிர்கட்சியினர் பொய்யான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.

ஆகையால் என்.பி.ஆரின் உண்மை நிலையை செய்தியாக ஊடகத்திடம் வெளியிட்டேன். அவையில் பேசிய கருத்தைதான் செய்தியாக வெளியிட்டேன்.

இதை தொடர்ந்து பேசிய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், என்.பி.ஆர் பணிகளில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சரத்துக்கள் குறித்து மத்திய அரசிடமிருந்து விளக்கம் வராததால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். விளக்கம் வந்தால்தான் முடிவெடுக்கப்படும் என்று அறிவித்து அதை ஏன் சட்டபேரவையில் தீர்மானமாக கொண்டு வரக்கூடாது? என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆர்பி உதயகுமார், மத்திய அரசு இயற்றியுள்ள ஒரு சட்டத்துக்கு விரோதமாக ஒரு தீர்மானத்தை எப்படி கொண்டு வர முடியும். அப்படி கொண்டுவரும் பட்சத்தில் அத்தீர்மானம் செல்லுபடி ஆகாது. என்.பி.ஆர் பணிக்கு எந்த ஆவணமும் தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். ஆகையால் இல்லாத ஒன்றை மக்களிடம் எடுத்துரைக்கும் போது அதனை தெளிவுபடுத்துவது அரசின் பொறுப்பு’ என்று தெரிவித்தார்.

இந்த விவாதத்தின் போது பேசிய முதலமைச்சர், பொதுமக்களிடத்திலும் சிறுபான்மையினரிடத்தும் எதிர்கட்சிகள் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. மேலும், இதனைக் காரணம் காட்டி மாநில அரசு மத்திய அரசிடம் பனிந்துள்ளது என்றும் அனைவரும் சிறைக்கு சென்று விடுவார்கள் என்றும் கூறுகின்றனர். எந்தக்காலத்திலும் இது நடக்கவே நடக்காது. உண்மை நிலையினை எடுத்துரைப்பது அரசின் கடமை.  போராட்டத்தைத் தூண்டும் போக்கில் எதிர்க்கட்சிகள் செயல்படும் பட்சத்தில், பதட்டமான சூழல் தணிக்கும் நோக்கில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார் என்று ஆவேசமாக பதில் அளித்தார்.

மேலும், 2003-ல் மத்திய அரசு என்.பி.ஆரையைக் கொண்டு வந்து அதில் சில சரத்துகளைச் சேர்க்கலாம், நீக்கலாம் என்று அனுமதி அளித்துள்ளது. இதன் விளைவாகவே தற்போது சில சரத்துக்களை மத்திய அரசு சேர்த்துள்ளது. அதற்கான விளக்கத்தைக் கேட்டே தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. ஆகையால் அச்ச உணர்வை போக்குவது அரசின் கடமை என்றார்.

மீண்டும் பேசிய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சரின் விளக்கத்தை நான் வரவேற்கிறேன். இதனை தீர்மானமாக அரசு கொண்டு வருமா? அல்லது என்.ஆர்.பி பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை அமைச்சர் அவையில் பதிவு செய்வாரா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மத்திய அரசின் விளக்கம் வரும் வரை என்.பி.ஆரின் பணிகள் தொடங்கப்பட்டமாட்டாது என்று தெரிவித்தார்.

– நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button